Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

வாத்தி டிரெய்லர் ரிலீஸ் தேதி இதுதான்!

UDHAYA KUMAR Updated:
வாத்தி டிரெய்லர் ரிலீஸ் தேதி இதுதான்!Representative Image.

வரும் பிப்ரவரி 8ம் தேதி மாலை வெளியாகிறது வாத்தி படத்தின் டிரெய்லர். இதுகுறித்த அதிகாரப் பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது செவன் ஸ்க்ரின் ஸ்டூடியோ. இதனால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். 

தனுஷ் நடிப்பில் அடுத்து அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் வாத்தி. இந்த படத்திலிருந்து பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் ஹிட் அடித்தது. இந்நிலையில், நேற்று படத்தின் அனைத்து பாடல்களும் வெளியிடப்பட்டது. 

வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தனுஷ் ரசிகர்களுக்கு பல அப்டேட்களையும் சில அட்வைஸ்களையும் வாரி வழங்கினார். பின்னர் மகிழ்ச்சியுடன் இசை வெளியீட்டு விழாவை நிறைவு செய்தனர். 

படத்தை வரும் பிப்ரவரி 17ம் தேதி வெளியிடுவதில் மும்முரமாக இருக்கும் படக்குழு, டிரெய்லர் வெளியீட்டு தேதியை அறிவிக்காமல் இருந்தது. இந்நிலையில், தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தனுஷின் வாத்தி பட டிரெய்லர் பிப்ரவரி 8ம் தேதி மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஜிவிபிரகாஷ் இசையில் படம் பட்டையைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்