இணையதளம் முழுக்க இரண்டு நாட்களாக அடித்து வெளுக்கிறார்கள் இயக்குநர் வம்சியை. வாரிசு படத்தைக் கொடுத்துவிட்டு ஏதோ காவியத்தை கொடுத்த ரேஞ்சுக்கு பில்டப் இருக்குதேன்னு இணைய வாசிகள் ட்ரோல்களை அவிழ்த்து விடுகிறார்கள். இதற்கு காரணம் வம்சி கொடுத்த சமீபத்திய பேட்டிதான்.
பிரபல சினிமா யூடியூப் சேனலுக்கு வம்சி பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் படத்தை ட்ரோல் செய்பவர்களை சாடி இருந்தார். என்னங்க பேசுறீங்க இது என்ன விளையாட்டா. டிவி சீரியல் ஒன்னும் சும்மா இல்ல. அவங்களும் கடின உழைப்பை போடுறாங்க. அவங்களும் கிரியேட்டிவ்வாக செயல்படுறாங்க. விஜய் மாதிரியான பெரிய நடிகர்கள் கூட தியாகம் செய்கிறார்கள் என பல விசயங்களைப் பற்றி பேசியிருந்தார்.
இதற்கு பதிலடியாக அ.வினோத், லோகேஷ் கனகராஜ் ஆகியோரது பேட்டிகளை எடுத்து கட் செய்து போடுகின்றனர் நெட்டிசன்கள்.
அ. வினோத் பேசும் வீடியோவில் நாம் என்னதான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் அதை குளோரிஃபை பண்ண வேண்டிய அவசியம் இல்லை. அதற்காக நமக்கு கொடுக்கப்படும் சம்பளம் அதிகம். ஆனால் இதுவே ஒரு ஆட்டோ ஓட்டுநரோ, கூலித் தொழிலாளியோ படும் கஷ்டம் அளவுக்கு நம் கஷ்டம் இல்லை என்று கூறியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் பேசும் வீடியோவில், நாம என்னதான் கஷ்டப்பட்டாலும் நமக்கு கோடிகளில் சம்பளம் கிடைக்கிறது. ஆனால் 1000 ரூபாய் வருமானம் வாங்கும் ஒருவர் அதில் 200 ரூபாயை படத்துக்காக ஒதுக்குகிறார். சில சமயங்களில் குடும்பத்தோடு படத்துக்கு வருகிறார்கள். அது கிட்டத்தட்ட அந்த வாரம் முழுக்க அவர்கள் சம்பாதித்த காசாக இருக்கும் அதனை நாம் மதிக்க வேண்டும். அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என சொல்ல அவர்களுக்கு உரிமை இருக்கிறது என பொருள்படும்படி பேசியிருந்தார் லோகேஷ்.
இத்தனை இருந்தும் படத்தின் வசூல் பாதிக்கப்படவில்லை. இப்போதுவரை 210 கோடி அளவுக்கு வசூல் சாதனை செய்துள்ளது வாரிசு.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…