Thu ,Mar 23, 2023

சென்செக்ஸ் 57,875.31
246.36sensex(0.43%)
நிஃப்டி17,050.55
62.15sensex(0.37%)
USD
81.57
Exclusive

வாரிசு, துணிவு இரண்டும் இறங்குமுகம்... என்ன நடக்கிறது?

UDHAYA KUMAR Updated:
 வாரிசு, துணிவு இரண்டும் இறங்குமுகம்... என்ன நடக்கிறது?Representative Image.

தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கியுள்ள படம் வாரிசு. தளபதி விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஜெயசுதா, யோகிபாபு, பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, பிரபு, ஸ்ரீகாந்த், ஷியாம் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இணைந்துள்ள நடித்துள்ளனர். தமன் இசையில் கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்திருந்தார். கடந்த 11ம் தேதி வெளியான இந்த படத்துக்கு மிகப் பயங்கரமான எதிர்பார்ப்பு இருந்தது. 

ஜனவரி 10ம் தேதி இரவு பிரிமியர் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டு பத்திரிகையாளர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. பிரிமியரில் படம் பார்த்த விமர்சகர்கள் இந்த படம் டிவி சீரியல் போல இருப்பதாக கமெண்ட் செய்யவே, இந்த படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வெளியாகத் துவங்கின. 

 வாரிசு, துணிவு இரண்டும் இறங்குமுகம்... என்ன நடக்கிறது?Representative Image

துணிவு கிளைமாக்ஸ்!

இதேநாளில் அஜித்குமார் நடிப்பில், ஹெச் வினோத் இயக்கிய துணிவு திரைப்படமும் வெளியானது. ஆரம்பத்தில் நல்ல வரவேற்பை பெற்றாலும், இரண்டாம் பாதியில் அதிலும் குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சியில் நம்பகத்தன்மை குறைவு காரணாக மோசமான விமர்சனத்தைப் பெற்றது. கதை நன்றாக இருப்பதாகவும், படத்தில் சொல்லப்பட்ட விசயங்களையும் பாராட்டிய விமர்சகர்கள் கிராபிக்ஸ் காட்சிகளை ஏன் இப்படி எடுத்துவிட்டார்கள் என குறைபட்டுக் கொண்டனர். 

 வாரிசு, துணிவு இரண்டும் இறங்குமுகம்... என்ன நடக்கிறது?Representative Image

கணெக்ட் செய்ய முடியவில்லை!

முதல் இரண்டு காட்சிகள் ரசிகர் ஷோ என்பதால் நல்ல பெயரைக் காப்பாற்ற வாரிசு, துணிவு படக்குழுக்கள் முயற்சித்த நிலையில், 3வது 4வது காட்சிகளிலிருந்து உண்மை வெளியில் தெரிய ஆரம்பித்துவிட்டது. படம் சரியாக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள ஆரம்பித்தார்கள் சில விஜய் ரசிகர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை படத்தில் சென்டிமெண்ட் காட்சிகள் கணெக்ட் ஆகவில்லை என்பது தவிர மற்ற அனைத்தும் சிறப்பாகவே இருந்தது.  

 வாரிசு, துணிவு இரண்டும் இறங்குமுகம்... என்ன நடக்கிறது?Representative Image

விடுமுறை தினங்களில்!

முக்கியமாக விஜய் தனது நடிப்பில் ரசிகர்களை கட்டிப் போடுகிறார். இதனாலேயே விஜய் விரும்பிகள் தொடர்ந்து திரையரங்குகளுக்கு சென்று வருகின்றனர். துணிவு படத்தில் கண்டென்ட் வெயிட்டாக இருக்கிறது இருந்தாலும் அதனை எடுத்த விதம் கொஞ்சம் மெனக்கெடல் குறைவாகவே இருக்கிறது.  ரசிகர்கள் விரும்பும் படமாகவே இரு படங்களும் இருக்கின்றன.  ஆனால் பொது மக்களாக பார்க்கும்போது அவர்களுக்கு இன்னும் விடுமுறையே ஆரம்பிக்கவில்லை. வரும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இன்னும் அதிக அளவிலான குடும்பங்கள் படத்துக்கு வருவார்கள் என நம்பப்படுகிறது. 

 வாரிசு, துணிவு இரண்டும் இறங்குமுகம்... என்ன நடக்கிறது?Representative Image

பொங்கலோ பொங்கல்!

முதல் நாளில் ஓரளவுக்கு வசூல் செய்த வாரிசு இரண்டாம் நாளில் காத்து வாங்க ஆரம்பித்தது. சரிவுடன் வசூல் காணப்பட்டது. இன்று வெள்ளிக்கிழமையும் பெரிய அளவில் வசூல் இருக்காது என்றே கூறுகிறார்கள். சனி தொடங்கி அடுத்த புதன்கிழமை வரை எவ்வளவு வருமானமோ அதுவே படத்தின் வசூலாக இருக்கும் என்கிறார்கள். 

 வாரிசு, துணிவு இரண்டும் இறங்குமுகம்... என்ன நடக்கிறது?Representative Image

உலகம் முழுக்க..!

முதல்நாளில் மட்டும் உலகம் முழுக்க 26.5 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்த இந்த படம் தமிழ்நாட்டில் 17 கோடி வசூலித்திருக்கிறது.  கர்நாடக, கேரள மாநிலங்களிலும் வசூல் பரவாயில்லாமல் இருந்தது.  ஆனால் இரண்டாவது நாளில் இந்த வசூல் சரிந்துள்ளது. இந்தியா முழுக்க 17 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. 

இதேபோல, துணிவு படமும் முதல் நாளில் செய்த வசூலைக் காட்டிலும் இரண்டாம் நாளில் குறைவாகவே செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்