Sun ,Apr 02, 2023

சென்செக்ஸ் 57,794.75
181.03sensex(0.31%)
நிஃப்டி17,012.25
60.55sensex(0.36%)
USD
81.57
Exclusive

துணிவு VS வாரிசு: பேனர்கள் கிழிப்பு; தடியடி வாங்கிய தல-தளபதி ஃபேன்ஸ் - வீடியோ! 

KANIMOZHI Updated:
துணிவு VS வாரிசு: பேனர்கள் கிழிப்பு; தடியடி வாங்கிய தல-தளபதி ஃபேன்ஸ் - வீடியோ! Representative Image.

கடந்த 9 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய், அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியனதால் ரசிகர்கள் செம்ம உற்சாகத்தில் உள்ளனர். இன்று அதிகாலை 1 மணிக்கு அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம், அதிகாலை 4 மணிக்கு விஜய் நடித்த வாரிசு திரைப்படம் முதல் காட்சி திரையிடப்பட்டது. இதனால் நேற்றிரவு 9 மணியில் இருந்தே தியேட்டர்கள் முன்பு விஜய், அஜித் ரசிகர்கள் குவிய ஆரம்பித்தனர். 

 

விஜய், அஜித் கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வது, பட்டாசு வெடிப்பது, கச்சேரி, டிஜே பார்ட்டி, பைக் வீலிங் என பலவகையான சாகசங்களில் இருதரப்பு ரசிகர்களும் இரவு முதலே ஈடுபட்டு வருகின்றனர். இதில் வழக்கம் போல் விஜய், அஜித் பட பேனர்களை மாறி, மாறி கிழிப்பது, தியேட்டர் வாசலில் அட்ராசிட்டி செய்து தடியடி வாங்குவது என இரு தரப்பு ரசிகர்களும் சிக்கி சின்னாபின்னமான வீடியோக்களைப் பார்க்கலாம்... 

 

தல, தளபதி படம் என்றாலே சென்னை ரோகினி தியேட்டர் கொண்டாட்டத்தில் முதலிடம் பிடிக்கும். அந்த வகையில் இந்த முறையும் ரோகினி தியேட்டரில் விஜய் நடித்த வாரிசு மற்றும் அஜித் நடித்த துணிவு படம் ரிலீஸ் ஆனது. அதிகாலை முதலே கும்பலாக கூடியிருந்த ரசிகர்கள் இசைக்கருவிகளை இசைத்தும், பாடல்களை பாடியும் உற்சாகத்துடன் முதல் நாள் முதல் காட்சியைக் காண காத்திருந்தனர். 

ரோகிணி திரையரங்கில் காவல்துறையினர் ரசிகர்கள் மீது தடியடி #ThunivuFDFS #VarisuFDFS #RohiniSilverScr pic.twitter.com/BDmjP5SENA

— Arun(அருண் குமார்.வே) (@Arun_report) January 10, 2023

குறிப்பாக திரையரங்குகளை பேனர்களால் அலங்கரிப்பது, பட்டாசு வெடிப்பது, மேலதாளம், பாடல்கள் இசைப்பது என நள்ளிரவு முதலே கொண்டாட்டங்கள் தொடங்கின.

துணிவு முதல் காட்சி முடிந்தவுடன் அஜீத் ரசிகர்கள் ரோகினி தியேட்டர் முகப்புகண்ணாடியில் கற்களை வீசி ஆவேசம்

போலிஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர் #Thunivu #Varisu pic.twitter.com/gj7gOJTmsj

— SʀɪNᴀᴛH ?? (@Itz_Srinath) January 10, 2023

சென்னை ரோகினி திரையரங்கில் 5,000-க்குமீ மேற்பட்ட ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். விஜய், அஜித் என இருவரின் ரசிகர்களும் ஒரே இடத்தில் இருந்ததால் இருவருக்கிடையே சலசலப்பு ஏற்பட்டது.

 

இதன் காரணமாக அதிகாலை 2 மணி அளவில் விஜய் இடம்பெற்ற பேனர்களை அஜித் ரசிகர்கள் கிழிப்பது, அஜித் இடம்பெற்ற பேனர்களை விஜய் ரசிகர்கள் கிழிப்பது என அட்டூழியம் செய்து வந்தனர். இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த இருதரப்பு ரசிகர்கள் மீதும் போலீசார் தடியடி நடத்தினர். 

துணிவு முதல் காட்சியில் அஜித் ரசிகர்கள் மீது போலிசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

கோவை அர்ச்சனா திரையரங்கில் துணிவு திரைப்படத்திற்கு வந்த அஜித் ரசிகர்களுக்குள் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் கண்ணாடி , இரும்பு தடுப்புகள் சேதம்.#Coimbatore pic.twitter.com/WnG3lWUZIQ

— கார்த்திக் சதிஸ்குமார் (@kovaikarthee) January 10, 2023

கோவை அர்ச்சனா திரையரங்கில் துணிவு படத்தின் முதல் காட்சியை காணவந்த ரசிகர்கள் திரையரங்கின் முன்பு இருந்த  கண்ணாடி கதவு உள்ளிட்ட பொருட்களை சூறையாடினர்.ரகளையில் ஈடுபட்டதால் அஜித் ரசிகர்கள் மீது லேசான தடியடி நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்