Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,466.56
-22.43sensex(-0.03%)
நிஃப்டி21,991.15
-4.70sensex(-0.02%)
USD
81.57
Exclusive

துணிவு 4 நாட்கள் செய்த சாதனையை 4 மணி நேரத்தில் முறியடித்த வாரிசு

UDHAYA KUMAR Updated:
துணிவு 4 நாட்கள் செய்த சாதனையை 4 மணி நேரத்தில் முறியடித்த வாரிசுRepresentative Image.

வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரித்திருக்கும் படம் வாரிசு. இது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 66வது திரைப்படம். தில் ராஜூவின் மிகப்பெரிய பில்டப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ளது வாரிசு படத்தின் டிரைலர். விஜய் நடிப்பிலேயே அதிக பில்டப்புகளுடன் வெளியாகும் இந்த படம் ஆரம்பத்திலிருந்தே விஜய் ரசிகர்களுக்கு பிடித்ததாக இல்லை. ஆனால் ரஞ்சிதமே, தீ தளபதி பாடல்களின் மூலம் கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது. ஆனால் டிரைலர் மூலம் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் இழந்து காணப்படுகிறது விஜய் ரசிகர் படை. 

இருந்தபோதிலும், இம்முறையும் சோசியல் மீடியா ரெக்கார்டு விஜய் வசம்தான். துணிவு 4 நாட்களாக செய்த சாதனையை 4 மணி நேரத்தில் தவிடுபொடியாக்கி நசுக்கி எறிந்துவிட்டது வாரிசு. துணிவு டிரைலர் பெற்றுள்ள லைக்ஸை விட வாரிசு லைக்ஸ் அதிகமாகியுள்ளது. 

வெளியான 4 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ள வாரிசு டிரைலர், 1.5 மில்லியன் லைக்ஸ்களையும் பெற்றுள்ளது. 

துணிவு 4 நாட்கள் செய்த சாதனையை 4 மணி நேரத்தில் முறியடித்த வாரிசுRepresentative Image

துணிவை பீட் செய்த வாரிசு

அதேநேரம் 4 நாட்களாகியும் துணிவு டிரைலருக்கு 1.4 மில்லியன் லைக்ஸ்களே வந்துள்ளது. துணிவு டிரைலரை இதுவரை 51 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். ஆனாலும் வாரிசு படத்தின் லைக்ஸை மிஞ்ச முடியவில்லை. 

வம்சி இயக்கியுள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகவிருக்கிறது. இந்த படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ளது என்பதால் யு சான்றிதழ் கிடைத்துள்ளது. 2 மணி நேரம் 50 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்ட இந்த வாரிசு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இப்போது வரை அறிவிக்கப்படாததால் மற்ற ரசிகர்களும் கடுப்பாகி இருக்கிறார்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்