Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,563.59
567.28sensex(0.78%)
நிஃப்டி22,313.45
189.80sensex(0.86%)
USD
81.57
Exclusive

வெறும் 3 நாட்களில் ரூ.100 கோடி.. வசூலை வாரிக்குவிக்கும் வாரிசு!!

Sekar Updated:
வெறும் 3 நாட்களில் ரூ.100 கோடி.. வசூலை வாரிக்குவிக்கும் வாரிசு!!Representative Image.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, ஆடம் ஜாம்பா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது பற்றி பரிசீலித்து வருகிறார்.

அடுத்த மாத இந்திய சுற்றுப்பயணத்தில், தேசிய தேர்வுத் தலைவர் ஜார்ஜ் பெய்லி மற்றும் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு ஆகியோர் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆஷ்டன் அகர், டோட் மர்பி மற்றும் அனுபவமிக்க நாதன் லியான் ஆகிய வீரர்களுடன் குயின்ஸ்லாந்து லெக்-ஸ்பின்னர் மிட்ச் ஸ்வெப்சனை அணியில் இணைத்தனர்.

ஆடம் ஜாம்பாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், அவர் இதனால் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளதாகத் தெரிகிறது. இது குறித்து அவர் கூறியதாக வெளியான செய்தியில், "நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன், நான் அதில் இருந்திருக்க விரும்புகிறேன். நான் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருவதைக் கொண்டு, இது எனக்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வாய்ப்பாக இருக்கும் என்று நினைத்தேன்.

ஆறு வாரங்களுக்கு முன்பு எனக்குக் கிடைத்த செய்தி இதுவாகும். எனவே இந்த சுற்றுப்பயணத்தில் இருப்பதில் நான் மிகவும் ஆவலாக இருந்தேன். மேலும் எனது பந்துவீச்சு பாணி அங்கே கைவசம் இருந்திருக்கலாம் என்பதுதான் செய்தி. ஆனால் கடைசி நிமிடத்தில் நான் தவிர்க்கப்பட்டுள்ளேன் என்று நான் நினைக்கிறேன்." என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் அடுத்த ஆண்டு அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தான் தனது முன்னுரிமை என்பதாலும், இந்திய சுற்றுப்பயணத்தில் தன்னை எடுக்காததால் உண்டான அதிருப்தியாலும், தனது டெஸ்ட் வாழ்க்கைக்கு எண்டு கார்டு போடலாம் என நினைப்பதாக ஆடம் ஜாம்பாவுக்கு நெருக்கமான வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் பிப்ரவரி 9-ம் தேதி நாக்பூரில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்