Thu ,Dec 07, 2023

சென்செக்ஸ் 69,653.73
357.59sensex(0.52%)
நிஃப்டி20,937.70
82.60sensex(0.40%)
USD
81.57
Exclusive

போடு வெடிய.. வாரிசு படத்தில் விஜய் இதை பண்ணிருக்காரா.. செம அப்டேட்!!

Sekar October 22, 2022 & 14:26 [IST]
போடு வெடிய.. வாரிசு படத்தில் விஜய் இதை பண்ணிருக்காரா.. செம அப்டேட்!!Representative Image.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடல் குறித்த அப்டேட் இன்று மாலை வெளியாகும் எனக் கூறப்படும் நிலையில், தற்போது வாரிசு படத்தின் மாஸ் அப்டேட் ஒன்று கசிந்துள்ளது.

நடிகர் விஜய் கடைசியாக நெல்சன் இயக்கத்தில் நடித்த பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் எந்த குறையும் இல்லை எனக் கூறப்பட்டது. பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடித்து வருகிறார். 

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகையான ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஷாம், யோகி பாபு, சம்யுக்தா ஷண்முகநாதன், குஷ்பு உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 

தில் ராஜூ படத்தை தயாரக்கிறார். பிரபா இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் குறித்த அப்டேட் இன்று மாலை வெளியாகவுள்ள நிலையில், படத்தின் முதல் பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சினிமாவில் நடிக்க தொடங்கிய காலகட்டத்தில் இருந்தே நடிகர் விஜய் தனது பல்வேறு படங்களிலும் பாடல்களை பாடி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில், தற்போது வாரிசு படத்தின் முதல் பாடலை விஜய் பாடியுள்ளதை கேட்டு தளபதி ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்