Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 74,077.04
1,080.73sensex(1.48%)
நிஃப்டி22,472.80
349.15sensex(1.58%)
USD
81.57
Exclusive

கோடி கோடியாய் கொட்டி ரெடி பண்ண புரமோசன்ல இப்படி ஒரு வேலைய பாத்துவிட்டாங்களே!

UDHAYA KUMAR Updated:
கோடி கோடியாய் கொட்டி ரெடி பண்ண புரமோசன்ல இப்படி ஒரு வேலைய பாத்துவிட்டாங்களே!Representative Image.

விஜய் பட போஸ்டர்களை தாறுமாறாக கிழித்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் வாரிசு. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். படம் வரும் பொங்கலுக்கு வெளியாக இருப்பதால், புரமோசன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

முதல் கட்டமாக சென்னையில் ரயில்களில் வாரிசு பட புரமோசன் பணிகளுக்காக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. சென்னையிலிருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒட்டப்பட்டிருந்த வாரிசு படத்தின் போஸ்டர்கள் தாறுமாறாக கிழிக்கப்பட்டிருக்கின்றன. 

ரயில்களில் ஒட்டும் போஸ்டர்கள் மற்ற சாதாரண போஸ்டர்கள் இல்லை. இவை விலையுயர்ந்த நவீன போஸ்டர்கள். இவற்றை கிழித்தால் ரயிலின் அழகே கெட்டுவிடும். அந்த அளவுக்கு அம்சமாக ஒட்டியிருந்த போஸ்டர்களை கிழித்துவிட்டனரே என விஜய் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள். 

ரயில்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை கிழித்தது யார், வேண்டுமென்றே இந்த சதிச் செயலில் ஈடுபட்டவர்களை யார் என கண்டுபிடித்து அவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என அவர்கள் குமுறுகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்