வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் குடும்பங்களின் ஏகோபித்த வரவேற்பில் வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது. விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். இவர்களுடன் சரத்குமார், ஜெயசுதா, பிரபு, ஷாம், ஸ்ரீகாந்த், சம்யுக்தா சண்முகம், சங்கீதா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
பொங்கல் விருந்தாக கடந்த ஜனவரி 11ம் தேதி வெளியான இந்த படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் விமர்சகர்கள் இந்த படத்தை சீரியலுடன் ஒப்பிட்டு பேசியதால் வம்சி கோபமடைந்தார். பேட்டியிலேயே எரிந்து விழ, அதனையும் கலாய்த்து வீடியோ வெளியிட்டனர் ரசிகர்கள்.
இந்நிலையில், திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும்போது டிவியில் வெளியாகும் அறிவிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ஓடிடியில் அடுத்த மாதம் வெளியாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், டிவியில் ஒளிபரப்பப்படுகிறதாம்.
வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டுக்கு சன்டிவியில் இந்த படத்தை ஒளிபரப்பவிருக்கிறார்களாம். இந்த தகவல் சன்டிவி தரப்பிலி்ருந்து வெளியில் கசிந்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…