வாரிசு படத்தின் டிரைலர் வெளிவராமல் தாமதமாக முக்கிய புள்ளி ஒருவர்தான் என பேசிக் கொள்கிறார்கள். யார் அவர் எதனால் தாமதம் வாருங்கள் தெரிந்துகொள்வோம்.
வாரிசு படத்தின் டிரைலர் முதலில் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என கூறப்பட்டது. பின் அது ஜனவரி 2ம் தேதி அதாவது இன்று வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் இன்றும் டிரைலர் ரிலீஸ் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் இன்று டிரைலர் ரிலீஸ் ஆகாது எனவும் அதற்கு படத்தின் இயக்குநர்தான் காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
வாரிசு படத்தின் இயக்குநர் வம்சி, முக்கியமான பேட்ச் ஒர்க் காட்சிகளை கடைசி நிமிடங்கள் வரைக்கும் எடுத்தாராம். அதிலும் கிறிஸ்துமஸ் தினத்துக்கு பிறகும் படப்பிடிப்பு நடத்தியுள்ளார். இதனால்தான் எல்லாமே தாமதமாகியிருக்கிறது. படத்தை முதலிலேயே சென்சாருக்கு அனுப்பியிருக்கவேண்டும். ஆனால் முழுவதும் முடித்துவிட்டு அனுப்பலாம் என காத்திருந்தனராம்.
படம் வெளியாக இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில், நாளை மறுநாள் அதாவது ஜனவரி 4ம் தேதி படத்தின் டிரைலரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம்.
அஜித் நடிப்பில் துணிவு படத்தின் டிரைலர் டிசம்பர் 31ம் தேதி வெளியாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. டிரைலரைப் பார்த்துவிட்டு பலரும் துணிவு படம்தான் சொல்லி அடிக்கும் கில்லி என பேசி வருகின்றனர். பொங்கல் ரேஸில் யார் முந்தப்போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…