Sat ,Dec 02, 2023

சென்செக்ஸ் 67,481.19
492.75sensex(0.74%)
நிஃப்டி20,267.90
134.75sensex(0.67%)
USD
81.57
Exclusive

வாடகைத்தாய் சர்ச்சை.. நயன்-விக்கி தம்பதியிடம் விசாரணையா?

Nandhinipriya Ganeshan October 14, 2022 & 14:25 [IST]
வாடகைத்தாய் சர்ச்சை.. நயன்-விக்கி தம்பதியிடம் விசாரணையா?Representative Image.

நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகள் பெற்றுக்கொண்டுள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி நான்கு மாதங்களே ஆகும் நிலையில், குழந்தை பிறந்தது எப்படி என ஒரு புறம் சர்ச்சை கிளம்பினாலும், மறுபுறம் அவர்கள் சட்டத்தை மீறி இதனை செய்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் விக்கி - நயன் ஜோடி சிறை செல்ல நேரிடும் என்றெல்லாம் புரலையை கிளப்பி வந்தனர். இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சுகாதாரத்துறை சார்பில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்து இருந்தார். இந்தக்குழு நேற்று விசாரணையை தொடங்கியது.

வாடகைத்தாய் சர்ச்சை.. நயன்-விக்கி தம்பதியிடம் விசாரணையா?Representative Image

இந்தநிலையில் இன்று செய்தியாளர்களை சந்திக்க அமைச்சர் மா.சுப்ரமணியன், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி சிகிச்சை பெற்ற மருத்துவமனை சம்பந்தமான விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்த விவகாரம் குறித்து மருத்துவத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழு ஆய்வு செய்து வருகிறது.

இது குறித்து விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. தேவைப்பட்டால் விக்னேஷ் சிவன்- நயன்தாரா தம்பதியினர் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்றும் கூறியுள்ளார். இந்த விசாரணை அறிக்கை வந்த பின்னரே, அவர் சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளார்களா? அல்லது அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றினார்களா? என்பது தெரியவரும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்