நடிகை நயன்தாரா விரைவில், குழந்தைப் பெற உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக விக்னேஷ் சிவன் சமூக வலைதளங்களில் பதிவிட்ட தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
பெரும் எதிர்பார்ப்புகளுடன், நயன்தாரா விக்கி திருமணம் கடந்த ஜூன் மாதம் நடந்தது. 7 வருடங்களாக காதலித்து, கல்யாண வாழ்க்கைக்கு வந்த இவர்கள் திரையுலக பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும், திருமணத்திற்கு பின்பு விக்கியிடம் நயன் சில கண்டிஷன்களைப் போட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், விக்கி- நயன் இருவரும் திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்ற போட்டோக்கள் வைரலாகி வந்தது. இந்த நிலையில், மீண்டும் விக்கி நயன் இருவரும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில், "நயனும் நானும் அம்மா & அப்பாவாகிவிட்டோம்" என்றும், இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது, எங்களின் பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள், நல்ல செயல்கள் எல்லாம் சேர்ந்து, தற்போது 2 ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தைகளின் வடிவில் வந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிகளும் எங்களுக்காக வேண்டும் என கூறி உயிர் & உலகம்" என்று பதிவிட்டுள்ளார். வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுத்தது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
Nayan & Me have become Amma & Appa❤️
— Vignesh Shivan (@VigneshShivN) October 9, 2022
We are blessed with
twin baby Boys❤️❤️
All Our prayers,our ancestors’ blessings combined wit all the good manifestations made, have come 2gethr in the form Of 2 blessed babies for us❤️?
Need all ur blessings for our
Uyir?❤️& Ulagam?❤️ pic.twitter.com/G3NWvVTwo9
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…