Cine Time : தமிழ் திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில், இவர்களது திருமணம் மாமல்லபுரம் அருகே கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை நடைபெறுகிறது. மேலும், அங்கு திருமணத்துக்காக பிரமாண்டமாக விசேஷ கண்ணாடி மாளிகை போன்று அரங்கு அமைத்துள்ளனர்.
மெஹந்தி விழாவுடன் கோலாகலமாக தொடங்கிய திருமண விழாவில், நெருக்கமான நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என சுமார் 100 பேர் மட்டுமே கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த திருமணத்திற்க்கு செல்பவர்கள் செல்போன் எடுத்து செல்லக் கூடாது என்பது மாதிரியான பலத்த கட்டுப்பாடுகளுக்கு நடுவே இந்த திருமணம் நடைபெறுகிறது. இந்த நிகழ்வு நெட்ஃப்ளிக்ஸ் தளத்துக்காக பிரத்யேகமாக பதிவு செய்யப்படுவதால் செல்போன் கேமிராக்களில் ஸ்டிக்கர் ஒட்டி உள்ள அனுமதிக்கும் அளவுக்கு கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன.
இதனையடுத்து, ரஜினி, விஜய், அஜித் உட்பட 200க்கும் மேற்பட்ட பிரபலங்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், காலை 11 மணிக்குள் இந்த நிகழ்வு நிறைவடையும் என தகவல் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…