விக்ரம் படத்தைத் தொடர்ந்து மீண்டும் சூப்பர் ஸ்டார் ஒருவருக்கு வில்லனாக நடிக்கவுள்ளார் விஜய் சேதுபதி.
தமிழ் திரையுலகில் மிக குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் விஜய் சேதுபதி. புகழ் லேட்டாக வந்தாலும் அதற்கு சமமாக பல மடங்காக வந்துகொண்டிருக்கிறது. அதற்கு காரணம் அவர் ஹீரோவாக மட்டும் நடிக்காமல், கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.
கமல்ஹாசனுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்த விக்ரம் திரைப்படம் நாளை உலகம் முழுக்க ரிலீஸாகவுள்ள நிலையில், மீண்டும் இவர் வில்லனாக நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இம்முறை தமிழில் அல்ல, தெலுங்கில்.
ஏற்கனவே தெலுங்கில் வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதி, இந்த முறை சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு நிகரான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என தகவல். ரஜினி, விஜய், கமல் ஆகியோருக்கு வில்லனாக நடித்துவிட்ட விஜய் சேதுபதி, அடுத்து விக்ரம் படத்திலும் வில்லனாக நடிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இப்போது மகேஷ்பாபுவுக்கு வில்லனாகவும் நடிக்கிறாராம் விஜய் சேதுபதி. இப்படி தனது இமேஜை பற்றி கவலைப்படாமல், கதாபாத்திரத்துக்காக நடித்து வரும் விஜய் சேதுபதி விரைவில் உலக அளவில் புகழ் பெறவேண்டும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…