விக்ரம் படத்தில் பஹத் பாசிலின் மனைவியாக நடித்திருக்கும் காயத்ரி கதாபாத்திரத்தின் தலையை வெட்டி, அதை கையில் ஏந்தி ரோட்டில் நடந்துவருகிறார் விஜய் சேதுபதி. தனது மனைவி கொலை செய்யப்பட்டதை அறிந்துகொண்ட பஹத் படு வேகமாக ஓடி வருகிறார். இப்படி ஒரு காட்சியை விக்ரம் படத்தில் பார்த்தீர்களா?
விக்ரம் திரைப்படம் கடந்த 3ம் தேதி வெளியாகி, உலகம் முழுக்க சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளிலும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ள விக்ரம் திரைப்படத்தின் காட்சிகள் அனைத்து நாட்களிலும் ஹவுஸ்ஃபுல் ஆகின்றது.
வார இறுதி நாட்களில் வேற லெவலுக்கு அட்வான்ஸ் புக்கிங் இருந்தது. அதேதான் வார நாட்களிலும் தொடர்ந்தது. இதனால் விக்ரம் படத்துக்கு டிக்கெட் கிடைக்காமல் பலரும் காத்திருக்க வேண்டியதாயிற்று. இந்நிலையில், மீண்டும் சனி, ஞாயிறுகளில் வேற லெவலுக்கு புக்கிங் நிறைவடைந்துள்ளது.
உலக நாடுகளில் பல திரையரங்குகளிலிலிருந்து வீடியோ எடுத்து டிவிட்டரில் படத்தின் காட்சிகளை பகிர்கிறார். அதில் பல காட்சிகள் வெட்டப்படாமல் சென்சார் செய்யப்பட்டிருப்பது தமிழக ரசிகர்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. நம்ம ஊரில்தான் பல காட்சிகள் வெட்டப்பட்டுள்ளன.
விஜய் சேதுபதியின் போதைப் பொருள் ஆலையை வெடி வைத்து தகர்த்துவிட்டதால், கோபத்தில் பஹத் பாசிலின் மனைவியைக் கொலை செய்கிறார். கொலை செய்துவிட்டு அவரது தலையை துண்டாக வெட்டி கையில் ஏந்தி தெருவில் நடந்து செல்கிறார். இப்படியாக கதையை யோசித்துள்ளார் லோகேஷ். ஆனால் இது குடும்பங்கள் பார்க்கும்போது நன்றாக இருக்காது அதுமட்டுமின்றி சென்சாரில் கட் செய்யப்பட்டுவிடும் என முன்னரே தெரிந்து அந்த காட்சியை எடுக்காமல் விட்டுவிட்டாராம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…