Sat ,Dec 02, 2023

சென்செக்ஸ் 67,481.19
492.75sensex(0.74%)
நிஃப்டி20,267.90
134.75sensex(0.67%)
USD
81.57
Exclusive

விஜய்யின் லியோ ரிலீஸ் தேதிக்கு பின்னால் இருக்கும் ஸ்கெட்ச்... | Vijay's Leo Update

Nandhinipriya Ganeshan Updated:
விஜய்யின் லியோ ரிலீஸ் தேதிக்கு பின்னால் இருக்கும் ஸ்கெட்ச்... | Vijay's Leo UpdateRepresentative Image.

நடிகர் விஜய் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். இந்த படத்திற்கு 'லியோ' என்று பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதுமட்டுல்லாமல், இந்த படத்தின் டைட்டில் வீடியோ சோனி மியூசிக் இந்தியா யூடியூப் சேனலில் வெளியானது. லியோ படத்தின் டைட்டில் புரோமோ இதுவரைக்கும் 1.3 கோடி பார்வையாளர்களை கடந்து, இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ள லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆயுத பூஜைக்கு ரிலீஸாக உள்ளது. தீபாவளிக்கு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  ஆயுத பூஜையில் ரிலீஸாக என்ன காரணம் என ரசிகர்கள் புலம்பிவருகின்றனர். ஆனால், படத்தில் இயக்குநர் சரியாக ஸ்கெட் போட்டு தான் இந்த தேதியில் ரிலீஸ் செய்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது தீபாவளிக்கு கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் போட்டிக்கு வரலாம் என சொல்லப்படுகிறது. மேலும், ஆயுத பூஜை நாட்களில் தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை என்பதால் படம் மக்களிடத்தில் நல்லவரவேற்பை பெறும் என்றும் சொல்லப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்