Sat ,Dec 09, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

மிகப்பெரிய சாதனையை செய்த விக்ரம் திரைப்படம்! அதுவும் ஒரு வாரத்துக்குள்ளேயே!

UDHAYA KUMAR June 09, 2022 & 19:03 [IST]
மிகப்பெரிய சாதனையை செய்த விக்ரம் திரைப்படம்! அதுவும் ஒரு வாரத்துக்குள்ளேயே!Representative Image.

தமிழகத்தில் மிகப் பெரிய சாதனையை செய்துள்ளது கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம். இதனால் கமல் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற நடிகர்களின் ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்துள்ள விக்ரம் திரைப்படம் கடந்த 3ம் தேதி வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. முதல் நாள் முதல் காட்சியிலேயே கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் ஆகியோரின் நடிப்பை பார்த்து வியந்து ரசிகர்கள் குதூகலமாகினர். லோகேஷின் கடும் உழைப்புக்கு தக்க சன்மானமாக ரசிகர்களின் அன்பு மழை பொழிந்தது. 

வாய்வார்த்தையாக இந்த விசயம் வெளியில் பரவி சனி, ஞாயிறுகளில் கூட்டம் அள்ளியது. திரையிட்ட தியேட்டர்கள் அனைத்தும் ஹவுஸ்புல் ஆகின. வார இறுதி மட்டுமின்றி வார நாட்களுக்கும் அதிக அளவில் புக்கிங் நிறைவடைந்தது. படம் வெளியாகி 7 நாட்கள் நிறைவடையும் தருவாயில் 200 கோடி வசூலை உலகம் முழுக்க பெற்றுள்ளது விக்ரம் திரைப்படம். 

வெளியான ஒரே வாரத்தில் 100 கோடியை எட்டி தமிழகத்தில் மிகப் பெரிய படமாக சாதனையை எட்டிப்பிடித்துள்ளது.  நேற்றைய தினமே ரூ. 100 கோடியை தமிழகத்தில் எட்டிவிட்டதாம்.  இதனால் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்