கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் திரைப்படம் ஜூன் 3ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்துக்கு இதுவரை இல்லாத அளவு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் விக்ரம் படத்தை காண கமல்ஹாசன் ரசிகர்கள் உள்பட தமிழ் திரை ரசிகர்கள் அனைவருமே ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர். படம் எப்படி போகிறது என்பது இன்னும் 2 நாளில் தெரியவந்துவிடும். அதற்கு முன்னதாக இன்றே படம் பார்த்த முக்கிய புள்ளி ஒருவர் படம் கண்டிப்பா பிளாக் பஸ்டர் ஹிட் அடிக்கும் என கூறி படக்குழுவை வாழ்த்தியுள்ளார். விக்ரம் படத்தை பார்த்துவிட்டு அவர் இப்படி பேசியிருப்பது ரசிகர்களுக்கும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பல நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்துள்ள படம் விக்ரம். இந்த திரைப்படத்தை கமல்ஹாசன் தனது ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் பேனரில் தயாரித்துள்ளார். இந்த படத்தின் தமிழ்நாடு தியேட்டரிக்கல் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. தமிழகம் மட்டுமின்றி, தெலுங்கானா, ஹைதராபாத், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கும் உரிமம் அதிக அளவில் வியாபாரமாகியுள்ளது. முக்கியமாக ஹிந்தி பெல்டில் இதுவரை இல்லாத அளவுக்கு வியாபாரம் பிச்சிக்கொண்டிருக்கிறது.
சில தினங்களுக்கு முன்னர் விக்ரம் படத்தின் முன்பதிவு தொடங்கியது. ஒரு சில தியேட்டர்கள் தவிர மற்ற இடங்கள் அமோகமாக டிக்கெட்டுகள் விற்பனை முடிந்தது. முக்கியமாக நகர்ப்புறங்களில் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களில் அனைத்து விக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டரில் விக்ரம் படத்தைப் பற்றி கூறியுள்ளார். விக்ரம் சூப்பர். உலகநாயகனுக்கு நன்றி. இயக்குநர் லோகேஷ் கனகராஜ், விஜய் சேதுபதி, அனிருத், பஹத் பாசில் மற்றும் மொத்த யூனிட்டுக்கும் நன்றி. திரைப்பட அனுபவம் மிகவும் நன்றாக இருந்தது. நிச்சயமாக பிளாக் பஸ்டர் என்று தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…