Sat ,Apr 13, 2024

சென்செக்ஸ் 74,244.90
-793.25sensex(-1.06%)
நிஃப்டி22,519.40
-234.40sensex(-1.03%)
USD
81.57
Exclusive

விக்ரம் ஒரிஜினல் சவுண்ட் டிராக் இன்று ரிலீஸ்

Udhaya Kumar July 07, 2022 & 17:07 [IST]
விக்ரம் ஒரிஜினல் சவுண்ட் டிராக் இன்று ரிலீஸ் Representative Image.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், சூர்யா என அனைவரும் இந்த படத்தில் தனது பங்குக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். 

கமல்ஹாசன் மீண்டும் வெறித்தனமான கதாபாத்திரத்தில் ஆக்ஷன் செய்து கலக்கியிருந்தார். இந்த படம் ஜூன் 3ம் தேதி ரிலீசான முதல் நாளிலிருந்தே வெறித்தனமான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படம் 1 மாத காலமாக தியேட்டரில் ஹவுஸ்புல்லாக ஓடி, நாளை ஓடிடியில் ரிலீசாகவுள்ளது. 

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் காணமுடியும்.  இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு அனிருத் இசையில் வெளிவரவுள்ளது விக்ரம் ஒரிஜினல் சவுண்ட் டிராக்குகள்.  இதனால் ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். 

இதனை இசையமைப்பாளர் தனது டுவிட்டர் கணக்கில் தெரிவித்திருந்தார். விக்ரம் படத்தை தியேட்டரில் காணும்போதே பஹத் பாசில், விஜய் சேதுபதிக்கான பின்னணி இசை வேற லெவலில் இருந்ததாக பாராட்டப்பட்டது. கமல்ஹாசனுக்கான பின்னணி இசை ஏற்கனவே வெளியாகிவிட்டதால், இவர்கள் மூவரின் இசையும் மற்ற இசையையும் கேட்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்