Tue ,Dec 12, 2023

சென்செக்ஸ் 69,928.53
102.93sensex(0.15%)
நிஃப்டி20,997.10
27.70sensex(0.13%)
USD
81.57
Exclusive

vikram rolex அயன் தேவாதான் விக்ரம் ரோலெக்ஸ்! திரைக்கதையில் இப்படி ஒரு டிவிஸ்ட்!

UDHAYA KUMAR June 07, 2022 & 09:56 [IST]
vikram rolex அயன் தேவாதான் விக்ரம் ரோலெக்ஸ்! திரைக்கதையில் இப்படி ஒரு டிவிஸ்ட்!Representative Image.

அயன் படத்தின் ஹீரோவான தேவா கதாபாத்திரம்தான், விக்ரம் படத்தில் வரும் ரோலெக்ஸ் என ரசிகர்கள் கதை எழுதி வருகின்றனர். இந்த விசயம் லோகேஷுக்கு தெரிந்தால் நிச்சயம் நல்ல கதையாக கொண்டு வர முடியும். 


நயன் விக்கி திருமணம்: விக்னேஷ் சிவன் திடீர் அறிவிப்பு!


உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் திரைப்படம் உலக அளவில் மிகப் பெரிய வசூலைக் குவித்து வருகிறது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு கமல்ஹாசன், லோகேஷ், விஜய் சேதுபதி, பஹத் பாசில் என ஒவ்வொன்றாக கூடி, பின் சூர்யா கேமியோ செய்துள்ளார் எனும்போது மிகப் பெரிய அளவில் வெடித்துள்ளது. இதனால் ரசிகர்களும் ஆளாளுக்கு ஒரு தியரியை கொண்டு வருகின்றனர். இவை அனைத்துமே சூப்பராக இருக்கிறது என்பதை விட, விக்ரம் படத்துக்கான கதைக் களத்துக்கு சிறப்பாக பொருந்துகிறது. 

தன் நண்பனை போதைப் பொருளுக்காக பறிகொடுத்த பிறகு, மனம் திருந்தி, தன் தாய்க்காக நல்ல வேலைக்கு செல்கிறான் தேவா. முன்பகை பலிக்காக காத்திருக்கிறது. ஏற்கனவே பகை கொண்ட அரசியல்வாதிகள் சாதுர்யமாக கடத்தல் செய்யும் தேவாவை பயன்படுத்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து போதைப் பொருட்களை கடத்த முயற்சிக்கிறார்கள். அது போதைப் பொருள் என தெரியாத தேவா அதற்கு ஒப்புக் கொள்கிறான். தாஸ் அண்ணன் மாதிரியே குறிக்கோளுடன் கடத்தல் செய்வதாக மட்டும் முடிவெடுத்துள்ள தேவா, அது போதைப் பொருள் என தெரியவே, அனைத்தையும் விட்டு விலக முடிவு செய்கிறான். அரசியல்வாதிகள் தேவாவின் காதலியையும், அம்மாவையும் கொன்றுவிடுகின்றனர். 

சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தல் கும்பல்களை அடையாளம் காண எவ்வளவோ முயன்றும் முடியாததால் தேவாவே போதைப் பொருள் கடத்தல்காரனாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு மிகப் பிரம்மாண்டமாக வளர்ந்துவிடுகிறான். கடைசியில் பார்த்தால் தேவா அரசாங்கத்துக்காக வேலை செய்பவன். உண்மையான ரோலெக்ஸை யாரும் பார்த்தில்லை என்பதால் அவனை பிடிக்கும் முயற்சியில் அரசாங்கத்துக்காக உதவி செய்கிறான் தேவா. இவ்வாறு இந்த கதை நகர்கிறது. 

இப்படி ரசிகர்கள் தங்கள் மன ஓட்டத்தை டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஒருவேளை தேவா - ரோலெக்ஸ் இரு கதாபாத்திரமும் ஒரே ஆளாக இருந்தால் நன்றாகத்தான் இருக்கும் அல்லவா? உங்களது எண்ணத்தை கமெண்டில் சொல்லுங்க!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்