அண்ணாத்த படத்தின் ஒட்டுமொத்த சாதனையையும் வெறும் 3 நாட்களில் முறியடித்து போய்க் கொண்டே இருக்கிறது விக்ரம் திரைப்படம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் திரைப்படம் உலகம் முழுக்க வசூலைக் குவித்து வருகிறது. கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பஹத் பாசில், சூர்யா, வசந்தி, நரேன், காளிதாஸ், செம்பன் வினோத், கோகுல் என நடித்த அனைவரும் ஸ்கோர் செய்துள்ளனர். இது மிகப்பெரிய விசயமாக பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படத்தில் அத்தனை பெரிய காஸ்டிங் இருந்தும் ரஜினிக்கு மட்டுமே முக்கியத்துவம் இருந்ததால் ரசிகர்கள் வெறுத்து போயினர். மேலும் தங்கச்சி பாசம் எனக் கூறி அவரையும் நிம்மதியாக இருக்கவிடாமல் செய்து படு மோசமான விமர்சனங்களைப் பெற்றது.
இந்நிலையில், விக்ரம் திரைப்படம் வெறும் 3 நாளில் அண்ணாத்த திரைப்பட வசூலை முறியடித்துள்ளது. மேலும் அஜித் நடித்த வலிமை படத்தின் வசூலையும் மிக நெருக்கமாக முந்தவுள்ளது. இதனால் கமல்ஹாசன் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். விஜய்யின் பீஸ்ட் திரைப்பட சாதனையையும் அமெரிக்காவில் தகர்த்துள்ளது விக்ரம் திரைப்படம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…