Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,953.43
464.44sensex(0.64%)
நிஃப்டி22,132.90
137.05sensex(0.62%)
USD
81.57
Exclusive

மொத ஆளா வெளிய போறது மகேஷ்வரியா? என்னங்க இப்படி சொல்லிட்டீங்க!

UDHAYA KUMAR October 18, 2022 & 19:34 [IST]
மொத ஆளா வெளிய போறது மகேஷ்வரியா? என்னங்க இப்படி சொல்லிட்டீங்க!Representative Image.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த வாரம் துவங்கப்பட்டு ஒரு வாரம் தாண்டி ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு துவங்கி 1 மணி நேரம் தினமும் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் ஓடிடியில் 24 மணி நேரமும் பார்க்கும்படியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

நேற்று எபிசோடில் அசல் கோளாறு, குயின்ஸியிடம் தவறாக நடந்துகொள்வதாக தகவல் பரவ, வீடியோவுடன் வைரலானார் கோலார். அதுபற்றி இந்த வாரம் கமல்ஹாசன் கேட்பார் எனத் தெரிகிறது. ஆனாலும் அந்த வீடியோவில் குயின்ஸியின் உடையைத் தான் தடவி பார்க்கிறார். அவர்களுக்கு இடையேயான புரிதல் நமக்கு இல்லாத நிலையில், அதைப் பற்றி பேசுவது தவறு. 

ஏற்கனவே ஜிபிமுத்துவைப் பகைத்துக் கொண்டதால் தனலட்சுமியை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என கூறிய ஜிபி முத்து ஆர்மி, இப்போது மகேஸ்வரி பக்கம் திரும்பியுள்ளது. அவர் எல்லாருடைய விசயத்திலும் மூக்கை நுழைத்து வருகிறார் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். அதிலும் சிலர் இந்த வாரம் இவர்தான் எலிமினேட் ஆவார் என்றும் கூறி வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்