Mon ,Dec 11, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

பாபா ரீ-ரிலீஸ் செய்யப்படுவது ஏன் தெரியுமா? இப்படி ஒரு சூட்சமம் இருக்கா!

UDHAYA KUMAR Updated:
பாபா ரீ-ரிலீஸ் செய்யப்படுவது ஏன் தெரியுமா? இப்படி ஒரு சூட்சமம் இருக்கா!Representative Image.

முத்துன கத்திரிக்காய அரிதாரம் பூசி விக்க முடிவு பண்ணிட்டாங்க போல என ரஜினிகாந்த் படத்தைப் பார்த்தே கமண்ட் அடிக்கும் அளவுக்கு இணைய வாசிகள் அவர் மீது வெறுப்பை வளர்த்திருக்கிறார்கள். இதெல்லாம் தமிழக அரசியலை கடந்த 5 வருடங்களாக ஃபாலோ செய்தவர்களுக்கு புரியும். 

ஒவ்வொரு நடிகரின் ரசிகரும் அவருக்கு போட்டியாளரான நடிகரின் ரசிகர்களையும் அந்த நடிகர்களையும் வசைபாடுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் ரஜினிகாந்தை மட்டுமே எல்லா ரசிகர்களும் அடித்து துவைக்கிறார்களே..ஏன்?

காய்த்த மரம் தான் கல்லடி படும் என்கிற பழமொழி இதில் எடுபட்டு வராது. ஒருவரின் வாய் தான் எல்லாத்துக்கும் காரணமாகும் என்பார்கள். வினை அதுதான்.  கலையை கலையாக செய்யாமல் பணம் வரும் வியாபாரமாக செய்தது தொடங்கி, அரசியல் ஆசை காட்டி படங்களை வியாபாரம் செய்தது ஓட வைத்ததும், ஆன்மீக அரசியல் என சொல்லி ஆசை வார்த்தை கூறி சொந்த ரசிகர்களையே ஏமாற்றியது என பல புகார்களை அடுக்குகிறார்கள் ரஜினி ரசிகர்களே. 

ஆளுங்கட்சியான திமுகவுக்கு நேர் எதிரான கொள்கையையே ரஜினி வைத்திருக்கிறார். பெரியார் மண்ணில் ஆன்மீக அரசியலை புகுத்த பாஜகவுக்கு மறைமுகமாக உதவுகிறார் என ரஜினி ரசிகர்களே வருத்தத்தில் இருக்கிறார்கள். 

சரி இப்போது ஏன் பாபா ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. காரணம் காந்தாரா திரைப்படம்தான். 

துர்கா சந்திரமுகி அறைக்கு போனா, சந்திரமுகிய பாத்தா, சந்திரமுகி மாதிரி தன்னையே நினச்சிக்கிட்டானு சந்திரமுகி படத்துல ஒரு வசனம் வரும். அதுமாதிரிதான் காந்தாரா படத்தின் வெற்றி ரஜினிகாந்தை யோசிக்க வைத்திருக்கிறது. 

தன்னுடைய சக போட்டியாளரான உலகநாயகன் இந்த வயதில் இத்தனை கோடி சம்பாதித்து தன்னுடைய இத்தனை வருட பெயரை அடித்துவிட்டாரே என்கிற பொறுமலும் இதில் இருப்பதாக சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். 

காந்தாரா படமும் பாபா படமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பிளாட்தான். என்ன ஒன்று பாபாவில் கதை இல்லாமல் போனது கொஞ்சம் வருத்தம்தான். ஆனால் பேஃண்டஸிக்கு பேஃண்டஸி, ஆன்மீகத்துக்கு ஆன்மீகம் என காந்தாரா பண்ணிய சாதனையை இளைஞர்களிடம் பாபாவும் நிகழ்த்தும் என ரஜினி கணக்கு போட்டிருக்கிறார். 

பாபா படத்தை அப்படியேத்தான் ரீ-ரிலீஸ் செய்யப்போகிறார்கள். ஆனால் அப்படி சொன்னால் யார் படம் பார்க்க வருவார்கள்.. ஏதாவது புதிதாக சேர்த்திருக்கிறார்கள் என்றால் தானே பழத்தை ஈ மொய்ப்பது போல அணி திரண்டு வருவார்கள். இதுதான் படக்குழுவினரின் கணக்கு. 

முன் வைத்த காலை நான் பின் வைக்க மாட்டேன் என்கிற டயலாக்கை மட்டும் தூக்கியிருப்பார்கள் போல. அப்படி அதை வைத்திருந்தால் ரஜினிகாந்த் ட்ரோல் செய்யப்படுவது உறுதி. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்