Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,953.43
464.44sensex(0.64%)
நிஃப்டி22,132.90
137.05sensex(0.62%)
USD
81.57
Exclusive

சிம்பு, கவுதம் மேனன் இடையில் சண்டையாம்! அப்ப VTK 2, VTV 2 கதி?

UDHAYA KUMAR Updated:
சிம்பு, கவுதம் மேனன் இடையில் சண்டையாம்! அப்ப VTK 2, VTV 2 கதி?Representative Image.

கௌதம் மேனனும் சிம்புவும் இணைந்தால் சிம்பு ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற ரசிகர்களும் கொஞ்சம் மகிழ்ச்சியடைவார்கள். காரணம் இவர்கள் கூட்டணியில் நல்ல படங்கள் கிடைக்கும் என்பதால் அவர்களும் மகிழ்வார்கள். இப்படித்தான் விண்ணைத் தாண்டி வருவாயா 2, வெந்து தணிந்தது காடு 2 ஆகிய படங்கள் விரைவில் உருவாகும் என்கிற நம்பிக்கையில் இருந்து வருகிறார்கள். ஆனால் இங்குதான் டுவிஸ்ட். சிம்புவுக்கும் கௌதமுக்கும் இடையில் பிரச்சனை வந்துள்ளதாம். 

விண்ணைத் தாண்டி வருவாயா 2, வெந்து தணிந்தது காடு 2 படங்கள் இனி வர வாய்ப்பில்லை என்கிறார்கள்.  சிம்பு, கௌதம் இருவருக்குள்ளும் சண்டை வந்து இருக்கிறதாம். இதனால் இருவரும் தனிப்பட்ட முறையில்கூட பேசுவதை நிறுத்திவிட்டார்களாம். இனி கௌதம் மேனன் படங்களில் சிம்பு நடிக்க மாட்டார் எனவும் சிம்புவுக்காக கௌதம் மேனன் கதையே எழுத மாட்டார் எனவும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். 

சிம்பு, கவுதம் மேனன் இடையில் சண்டையாம்! அப்ப VTK 2, VTV 2 கதி?Representative Image

வெந்து தணிந்தது காடு

கரடுமுரடாக போய்க்கொண்டிருந்த சிம்புவின் சினிமா வாழ்க்கையில் நல்ல வெளிச்சத்தை ஏற்படுத்தி கொடுத்தது வெந்து தணிந்தது காடு திரைப்படம்தான். கௌதமுடன் சேர்ந்தால் தான் நல்ல நடிகன் என்பதை சிம்புவே உணர்வார் போல. முதல் பாகத்திலேயே பின்னி பெடலெடுத்த சிம்பு இரண்டாவது பாகத்துக்காக காத்திருந்தாராம்.  உண்மையில் அந்த பாகத்தில்தான் சிம்புவின் நடிப்புப் பசிக்கு தீனி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இருவருக்குள்ள பத்திக்கிச்சே. 

என்னதான் பிரச்னை என விசாரித்தால், அவர்களுக்குள் பிரச்னையே இல்லை, கௌதம் மேனன் இப்போது காஷ்மீரில் இருக்கிறார். இதனால் அடுத்த படம் குறித்து ஏதும் பேச முடியாத நிலை. விரைவில் அவர் சென்னை வந்ததும் சிம்புவிடம் கால்ஷீட் கேட்பார். அப்போது புரியும் இருவருக்கும் பிரச்னை இல்லை என்பது என கூறுகிறார்கள் சிம்புவின் தரப்பினர். ஆனால் சிம்புவின் வளர்ச்சி பிடிக்காத யாரோ இப்படி கிளப்பி விடுகிறார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்