Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

சமந்தாவுக்கு இப்படி ஒரு நோயா?.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்..

Nandhinipriya Ganeshan October 29, 2022 & 17:49 [IST]
சமந்தாவுக்கு இப்படி ஒரு நோயா?.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்..Representative Image.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா கடந்தாண்டு அக்டோபர் மாதம் தனது காதல் கணவரும், நடிகருமான நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும், ரசிகர்களுக்கும் இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து  சமந்தா கடந்தாண்டு வெளியான புஷ்பா படத்தில் இடம் பெற்ற ஊ சொல்றியா மாமா பாடலின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். இதனால் அவரின் அடுத்தடுத்த படங்கள் மீது ரசிகர்களின் கவனம் குவிந்து வருகிறது.

சமந்தாவுக்கு இப்படி ஒரு நோயா?.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்..Representative Image

தமிழில் கடைசியாக விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் நடிப்பில் யசோதா படம் வெளியாகவுள்ளது. ஹரிஹரிஷ் இயக்கியுள்ள இந்த படத்தில்  வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் விஜய் தேவரகொண்டாவுடன் ‘குஷி’ படத்தில் நடித்து வரும் சமந்தாவின் உடல்நிலை குறித்து சமீபத்தில் வதந்திகள் பரவி வந்தன. கடந்த 2 தினங்களுக்கு முன்பு யசோதா படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சமந்தா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சமந்தாவுக்கு இப்படி ஒரு நோயா?.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்..Representative Image

அதில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படம் ஒன்றும் இடம் பெற்றுள்ளது. மேலும் அந்த பதிவில், "யசோதா படத்தின் ட்ரெய்லருக்கு நீங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. உங்கள் அனைவருடனும் நான் பகிர்ந்து கொள்ளும் இந்த அன்பும் தொடர்பும் தான், வாழ்க்கை என் மீது வீசும் முடிவில்லாத சவால்களைச் சமாளிக்க எனக்கு வலிமை அளிக்கிறது.

சமந்தாவுக்கு இப்படி ஒரு நோயா?.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்..Representative Image

சில மாதங்களுக்கு முன்பு எனக்கு Myositis எனப்படும் ஆட்டோ இம்யூன் நிலை இருப்பது கண்டறியப்பட்டது. சிகிச்சைப் பெற்று சரியான பிறகு இதைப் பகிரலாம் என்று நினைத்தேன். ஆனால் நான் எதிர்பார்த்ததை விட நீண்ட காலம் எடுக்கும் என்று தெரிகிறது. நான் விரைவில் பூரண குணமடைவேன் என்று மருத்துவர்கள் நம்பிக்கையுடன் கூறியுள்ளனர். உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் எனக்கு நல்ல நாட்களும் கெட்ட நாட்களும் இருந்தது. என்னால் இன்னும் ஒரு நாளைக் கடக்க முடியாது என்று உணரும் நேரத்தில் எப்படியோ அந்த தருணம் கடந்து செல்கிறது. இதுவும் கடந்து போகும்" என்று தெரிவித்துள்ளார். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்