Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,563.59
567.28sensex(0.78%)
நிஃப்டி22,313.45
189.80sensex(0.86%)
USD
81.57
Exclusive

திருமணம் முடிந்து பத்து நாளில் நடந்த துயர சம்பவம்.. | Youtuber Irfan Car Accident

Nandhinipriya Ganeshan Updated:
திருமணம் முடிந்து பத்து நாளில் நடந்த துயர சம்பவம்.. | Youtuber Irfan Car AccidentRepresentative Image.

கையேந்தி பவன் முதல் ஸ்டார் ஹோட்டல் வரை அனைத்து ஹோட்டல்களிலும் உணவு எப்படி இருக்கிறது என சாப்பிட்டு விமர்சனம் சொல்லி youtubeல் பாப்புலர் ஆனவர் இர்ஃபான். தமிழில் உணவு பதிவுகளை வெளியிடுவதால், இவருடைய இர்ஃபான் வியூ என்ற சேனலுக்கு 3.64 மில்லியன் சப்ஸ்க்ரைபர்ஸ் இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் ஏகப்பட்ட தகவல்களை தன்னுடைய வீடியோவில் தரும் இர்ஃபானு சமீபத்தில் தான் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. அதற்கு அவர் தமிழக ஆளுநர் உள்ளிட்ட பலரையும் நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து இருந்தார்.

தற்போது இந்த திருமண போட்டோக்களை எல்லாம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். இதைக் கண்ட பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில், இர்ஃபான் கார் விபத்தில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே சென்றுக் கொண்டிருந்த போது எதிரே வந்த பத்மாவதி என்ற பெண் மீது பலமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. 

எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இர்ஃபானின் டிரைவர் அசாருதீன் என்பவர் தான் காரை ஓட்டி இருக்கிறார் என்று முதற்கட்ட தகவல் கூறுகிறது. இந்த விபத்து பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை. திருமணமான பத்து நாட்களில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது இர்ஃபான் ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்