Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

How to Treat Constipation During Pregnancy at Home: கர்ப்பக்காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலை போக்குவது எப்படி?

Nandhinipriya Ganeshan July 26, 2022 & 09:25 [IST]
How to Treat Constipation During Pregnancy at Home: கர்ப்பக்காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலை போக்குவது எப்படி?Representative Image.

How to Treat Constipation During Pregnancy at Home: கர்ப்பக்காலத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் மலச்சிக்கலும் ஒன்று. கருவில் குழந்தையின் வளர்ச்சி அதிகரிக்கும்போது கர்ப்பபையில் இருந்து கீழிருக்கும் மலக்குடல் மற்றும் சிறுநீரக பாதையிலும் அழுத்தும் ஏற்படும். இதனால் மலச்சிக்கல் உண்டாகும். மலச்சிக்கல் பிரச்சனைக்கு எத்தனையோ கை வைத்தியங்கள் இருக்கின்றன.

ஆனாலும், அவை அனைத்தையும் கர்ப்பிணி பெண்கள் செய்ய முடியாது. உதாரணமாக, பப்பாளி மற்றும் வாழைப்பழம் போன்றவை மலச்சிக்கல் பிரச்சனையை போக்குவதில் சிறந்தவை. ஆனால், கர்ப்பமாக இருக்கும்போது இவற்றை சாப்பிடக்கூடாது, ஏனென்றால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும். எனவே, கர்ப்பக்காலத்தில் மலச்சிக்கலை போக்குவதற்காகவே சில கை வைத்தியங்கள் இருக்கின்றன, அவற்றை மேற்க்கொண்டால் மலச்சிக்கலில் இருந்து விரைவில் குணமடையலாம், இதனால் குழந்தைக்கும் பாதிப்பு இருக்காது.

Most Read: நான்கு மாத கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்…

மலச்சிக்கல் குணமாக வீட்டு வைத்திங்கள்:

❖ தர்பூசணி விதையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால், மலச்சிக்கல் உடனே நீங்கும். அதுமட்டுமல்லாமல், தர்பூசணி நீர்ச்சத்து நிறைந்த பழம் என்பதால் கர்ப்பிணி பெண்கள் இதை சாப்பிடவும் செய்யலாம்.

❖ தினமும் ஒரு ஆப்பிள் தவிர்க்காமல் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையே வராது. அப்படியே இருந்தாலும் விரைவில் குணமாகும்.

Most Read: அழகா இருக்குனு அடிக்கடி திரெட்டிங் பண்ணுறிங்களா? அப்பா இந்த பிரச்சனையெல்லாம் சந்திக்க ரெடியா இருந்துக்கோங்க..

❖ இரவு முழுவதும் 10 உலர் திராட்சையையும், காலையில் 3 பேரீச்சையும் (10 நிமிடங்களுக்கு) ஊறவைத்து இரண்டையும் மைய அரைத்து வெதுவெதுப்பான பாலில் கலந்து குடித்தால் மலச்சிக்கல் எவ்வளவு தீவிரமாக இருந்தாலும் படிபடியாக குணமாகும்.

❖ ஒரு டம்பளர் வெதுவெதுப்பான நீரில் 3-4 ஸ்பூன் எலும்பிச்சை சாற்றினை கலந்து குடித்தால் உடனடியாக மலச்சிக்கல் பிரச்சனை குணமடையும்.

Most Read: கர்ப்பிணிகள் பேரிச்சம் பழத்தை இப்படி சாப்பிடுங்க.. உங்க வயிற்றில் வளரும் குழந்தைக்கும் நல்லது..

❖ தினமும் 200 கிராம் ப்ளூபெர்ரி பழங்களை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். அதுமட்டுமல்லாமல், வைட்டமின் சி சத்து நிறைந்த இப்பழம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

Tags:

How to cure constipation during pregnancy naturally in tamil | How to treat constipation during pregnancy at home | Constipation during pregnancy remedies


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்