கிறிஸ்துமஸ் விழாவில் சுயநலம் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையுடன் அன்பாக இருந்தால் தான் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என ஓபிஎஸ் பேசியுள்ளது ஈபிஎஸ் அணியினருக்கு விடுக்கப்பட்ட சமாதானத்திற்காக மறைமுக அழைப்போ? என்ற சந்தேகம் சோசியல் மீடியாவில் எழுப்பப்பட்டுள்ளது.
அதிமுகவின் ஓபிஎஸ் அணி சார்பில் சென்னை கீழ்ப்பாகம் ஹால்ஸ் சாலையில் உள்ள நேச்சியர் தேவலாயத்தில் கிறிஸ்த்துமஸ் பெருவிழா கொண்டாடப்பட்டது. அப்போது விழா மேடையில் பேசிய ஓ பன்னீர் செல்வம், இயேசு பிரான் பிறந்தநாளை கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடப்படுகிறது
. அவரின் போதனைகள் உலகம் முழுவதும் ஈர்த்துள்ளது. தவறு செய்த மக்களை மன்னிக்கும் குமரான் இயேசு பிரான் தன்னை சிலுவையில் அறைந்தவர்களுக்கும் மன்னிப்பு கேட்டவர். இயேசு பிரான்அன்பு இருந்தால் ஒற்றுமை தானாக பிறக்கும். அனைவரும் விருப்பு வெறுப்பு இன்றி ஒற்றுமையுடன் வாழ வேண்டும். சுய நலத்துடன் வாழும் வாழ்கை ஆரம்பத்தில் இனிக்கும் இறுதியில் கசக்கும் சுய நலமின்றி வாழும் வாழ்க்கை ஆரம்பித்தில் கசக்கும் இறுதியில் இனிக்கும் எனத் தெரிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஒபிஎஸ், அதிமுக தன் பக்கம் தான் உள்ளது என்பது நிஜம் தான், அது மாயத் தோற்றம் அல்ல என்றும். விரைவில் பொதுக்குழு கூட்டம் கூட்டப்படும் என தெரிவித்த அவர், இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எங்கள் மனக்குமுறல்களை வெளிப்படுத்தினோம் என்றும் கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…