தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி திராவிட மாடல், தமிழ்நாடு, பெரியார், அண்ணா, அம்பேத்கர், மதநல்லிணக்கம், பெண்ணுரிமை, அமைதி பூங்காவாக தமிழ்நாடு உள்ளிட்ட சில வார்த்தைகளை வேண்டுமென்றே படிக்காமல் தவிர்த்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பேரவையில் ஆளுநர் இருக்கும் போதே அவரது செயலைக் கண்டித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசு அச்சிட்ட கொடுத்த உரை மட்டுமே அவைக்குறிப்பில் இடம் பெறும் என்றும், அவர் படித்த உரை அவைக்குறிப்பில் இடம் பெறாது என்றும் தீர்மானம் நிறைவேற்றினார்.
இதனையடுத்து அவை மரபை மீறிய செயலாக ஆளுநர் ஆர்.என்.ரவி பேரவை நடந்து கொண்டிருக்கும் போதே, தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே வேகமாக வெளியேறினார். இதனையடுத்து சட்டப்பேரவை முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்.எல்.ஏ. வானதி ஸ்ரீனிவாசன், ஆளும் கட்சியும் அவர்களுடன் கூட்டணியில் உள்ள கட்சிகளும் கேவலமான நாடகத்தை அரங்கேற்றி உள்ளன.
நிர்வாக திறன் இன்மை, லஞ்சம் மற்றும் வாரிசு அரசியல் குறித்து மக்கள் மத்தியில் இருக்கும் எதிர்ப்பை மறைப்பதற்கு இன்று ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்தி வெளிநடப்பு செய்துள்ளனர்.
இந்த அரசாங்கத்தின் திட்டம் மற்றும் கொள்கையினை ஆளுநர் படிப்பது மரபு. ஆனால் ஆளுங்கட்சியின் சித்தாந்தத்தின் ஊதுகோளாக ஆளுநர் இருக்க வேண்டும் இந்த அரசு நினைக்கிறது.
இதற்கான அரசியல் களமாக சட்டமன்றத்தை மாற்றியுள்ளனர். இது மாநிலத்தின் வளர்ச்சிக்கு பயன் அளிக்காது. இதனை பாஜக கண்டிக்கிறது. நீட் விவகாரத்தில் ஆளுநர் கேட்டதை அரசு பொதுவெளியில் ஏன் சொல்ல மறுக்கிறது? உலக சட்டப்பேரவில் ஆளுநரை அழைத்து அசிங்கப்படுத்தி உள்ளனர். இதுதான் ஜனநாயக மரபா? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்,
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…