Sun ,Dec 10, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

மதிப்பெண் மறுகூட்டலுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்..!

madhankumar June 22, 2022 & 08:45 [IST]
மதிப்பெண் மறுகூட்டலுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்..!Representative Image.

10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மாணவர்கள் மறுகூட்டலுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக பொது தேர்வுகள் நடத்தப்படவில்லை. இதனையடுத்து கொரோனா பரவல் குறைந்ததையடுத்து 2021-2022 ஆம் ஆடுகளுக்கான பொது தேர்வுகள் இந்த ஆண்டு நடத்தப்பட்டன, இதற்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஜூன் 1முதல் தொடங்கப்பட்டன. ஜூன்17ம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் 20ம் தேதி  10 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.

அதன்படி 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வைத்து வெளியிட்டார் இதில் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8,06,277 பேரில் 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவர்களைவிட மாணவிகள் 5.36 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 93.76 ஆகும். 

இதே போல 10 ஆம் வகுப்பு பொது தேர்வை  9,12,620 மாணவர்கள் எழுதிய நிலையில், 8,21,994 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதில் மாணவர்களை விட மாணவிகள் 8.55 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 90.1 ஆகும். 

இந்நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் மறுகூட்டலுக்கு இன்று முதல் வில்லாபிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. இந்த மதிப்பெண் சான்றிதழ்களை பள்ளி அல்லது www.dge.tn.nic.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனவும். வரும் இன்று முதல் 29 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் 12-ம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 27-ம் தேதி தொடங்கும் என்றும் 10-ம் வகுப்பு துணைத்தேர்வு ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்