Sat ,Sep 23, 2023

சென்செக்ஸ் 66,009.15
-221.09sensex(-0.33%)
நிஃப்டி19,674.25
-68.10sensex(-0.34%)
USD
81.57
Exclusive

குடும்ப தலைவிகளுக்கான உரிமைத் தொகை திட்டம்... விண்ணப்பம் வெளியீடு!

Baskaran. S Updated:
குடும்ப தலைவிகளுக்கான உரிமைத் தொகை திட்டம்... விண்ணப்பம் வெளியீடு!Representative Image.

சென்னை: குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்ப படிவம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் அமல்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தது. இதற்கான ஆலோசனை கூட்டம் முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என்றுப் பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கான பயனாளிகளை தேர்தெடுக்க சிறப்பு முகாம்கள் நடத்தி தேர்தெடுக்கவும் முதல்வர் உத்தரவிட்டிருந்தார். 

குடும்ப தலைவிகளுக்கான உரிமைத் தொகை திட்டம்... விண்ணப்பம் வெளியீடு!Representative Image

இதைத் தொடர்ந்து ஜூலை மூன்றாவது வாரத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப படிவம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 13 கேள்விகள் அடங்கியுள்ளது. ஆதார் எண், குடும்ப அட்டை, மின்கட்டண ரசீது, வங்கி பாஸ்புக் ஆவணங்கள், உள்ளிட்டவை அடங்கியுள்ளன. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்