Mon ,Dec 11, 2023

சென்செக்ஸ் 70,028.54
202.94sensex(0.29%)
நிஃப்டி21,019.00
49.60sensex(0.24%)
USD
81.57
Exclusive

10th ரிசல்ட்.. பெயில் அச்சம்.. உயிரை மாய்த்த சிறுவன்.. சோகத்தில் கிராமம்!!

Sekar June 16, 2022 & 14:47 [IST]
10th ரிசல்ட்.. பெயில் அச்சம்.. உயிரை மாய்த்த சிறுவன்.. சோகத்தில் கிராமம்!!Representative Image.

பொதுத் தேர்வில் பெயில் ஆகி விடுவோம் எனும் பயத்தில் 10 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் ஒருவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிந்து நாளை 10 ஆம் வகுப்பிற்கும், 20 ஆம் தேதி 12 ஆம் வகுப்பிற்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் 20 ஆம் தேதியே வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நாளை 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் பதற்றத்தில் சங்கரன்கோவில் அருகே ஆராய்ச்சி பட்டி என்ற பகுதியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவன் பிரபாகரன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
 
தனது தேர்வு முடிவு எப்படி இருக்குமோ, பெயில் ஆகி விடுமோ என்ற அச்சத்தில் பிரபாகரன் கடந்த சில நாட்களாகவே அச்சத்தில் இருந்ததாகவும், நாளை தேர்வு முடிவு என்ற தகவல் வெளியானதும் அவரது அச்சம் அதிகமாகி இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. 

தேர்வு பயத்தில் மாணவன் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வல்ல. உங்களுக்கு தற்கொலை எண்ணம் தோன்றினாலோ, மன உளைச்சலால் அவதிப்பட்டாலோ உடனடியாக மாநில உதவி மையம் 104 என்ற எண்ணுக்கு அழையுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்