புதைக்கப்பட்ட சிறுமியின் உடலில் இருந்து தலை துண்டிக்கப்பட்டு கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் சித்திரவடியைச் சேர்ந்த பாண்டியன் என்பவருக்கு 12 வயத்தில் கிருத்திகா என்னும் மகள் உள்ளார். அவர் அரசு பள்ளியில் 6 ஆம் வகுப்பு படுகிறார். கடந்த அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி தெருவிளக்கு பழுதடைந்துவிட்டதால் அதை மாற்ற கலைச்செல்வன் என்பவர் மிமின்கம்பத்தின் மீது ஏறி வேலை பார்த்துக்கொண்டிருந்தார். மின்கம்பம் மோசமான நிலையில் இருந்ததால் அடிப்பகுதி முறிந்து அங்கு விளையாடிக்கொண்டிருந்த கிருத்திகா மீது விழுந்து விபத்துக்குள்ளானது.
பலத்த காயமடைந்த கிருத்திகாவை அவளின் பெற்றோர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இருப்பினும் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஒரு வாரத்திற்கு மேல் சிகிச்சை அளித்தும் பலனின்றி அந்த சிறுமி அக்டோபர் 14 ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். பிறகு பிரேத பரிசோதனை முடிந்து பெற்றோர்களிடம் போலீசார் உடலை ஒப்படைத்தனர். அடுத்த நாள் 15 ஆம் தேதி சிறுமியின் உடலை சித்திரவாடியில் உள்ள மயானத்தில் புதைத்துள்ளனர்.
ஆனால் கடந்த வாரம் 24 ஆம் தேதி அந்த வழியாக சென்ற கிராமத்தினர் சிறுமி புதைக்கப்பட்ட இடத்தில் மஜால், குங்குமம், எலும்பிச்சை போன்ற பொருட்கள் இருந்ததை பார்த்து பதறி போய் அவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததால், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முன்னிலையில் சிறுமி புதைக்கப்பட்ட இடத்தை தோண்டினர்.
அப்போது புதைக்கப்பட்ட சிறுமியின் உடலில் தலை இல்லாததால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மீண்டும் கிருத்திகாவின் உடலை இரண்டாவது பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கொடூர செயலை செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சமீபத்தில் நடந்த சூரிய கிரகணத்தின் போது நரபலி மாந்திரீகம் செய்யப்பட்டுள்ளதா எனவும் விசாரித்து வருகின்றனர். கேரளாவை அடுத்து இப்போது தமிழகத்திலும் நரபலி சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மக்கள் பயத்தில் இருக்கின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…