Thu ,Mar 23, 2023

சென்செக்ஸ் 57,875.31
246.36sensex(0.43%)
நிஃப்டி17,050.55
62.15sensex(0.37%)
USD
81.57
Exclusive

நெஞ்சை உலுக்கும் சம்பவம்... டிப்பர் லாரி மோதி 13 வயது சிறுமி உடல் துண்டாகி பரிதாபமாக உயிரிழப்பு... 

Nandhinipriya Ganeshan October 31, 2022 & 10:56 [IST]
நெஞ்சை உலுக்கும் சம்பவம்... டிப்பர் லாரி மோதி 13 வயது சிறுமி உடல் துண்டாகி பரிதாபமாக உயிரிழப்பு... Representative Image.

புதுக்கோட்டை அருகே உள்ள சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலு என்பவரது மகள் காயத்ரி. 13 வயதான இந்த சிறுமி இன்று தனது வீட்டிலிருந்து எதிரே உள்ள புதுக்கோட்டை அறந்தாங்கி சாலையை கடக்க முயன்றபோது புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி நோக்கி கிரஸர் கல் ஏற்றி சென்ற அசோக் லைலாண்ட் டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக காயத்ரியின் மீது மோதியது. இந்த சம்பவத்தில் உடல் துண்டாகி காயத்ரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதை கண்டு அதிர்ச்சியடைந்த உயிரிழந்த சிறுமியின் உறவினர்கள் அந்த சாலையில் மரங்களை போட்டு மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து அங்கு வந்த வல்லத்திராகோட்டை போலீசார் சிறுமியின் உறவினர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் படுத்தினர். பின்னர், போலீசார் சிறுமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து டிப்பர் லாரியை ஓட்டிவந்த நல்லபுடையான்பட்டியை சேர்ந்த தங்கராசு என்பவரை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்