ஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தானே மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில வாரங்களாகவே பெரும் அரசியல் பதற்றம் நீடித்து வருகின்றது. இதனால் மகாராஷ்டிர மாநிலத்தின் பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காவலர்கள் உச்சகட்ட உஷார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆளும் சிவசேனா கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பூசல்கள், நெருக்கடி காரணமாக ஆட்சி கவிழும் நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில் சிவசேனா கட்சியினர் மிக பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் தானே மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜூன் 30ம் தேதி வரை அரசியல் கூட்டங்கள், போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பதட்டமான சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வரவும் மக்களை பாதுகாக்கவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…