Thu ,Mar 23, 2023

சென்செக்ஸ் 57,875.31
246.36sensex(0.43%)
நிஃப்டி17,050.55
62.15sensex(0.37%)
USD
81.57
Exclusive

அதிர்ச்சி.. திருவிழாவில் 151 பேர் பலியான பரிதாபம்!!

Sekar October 30, 2022 & 12:39 [IST]
அதிர்ச்சி.. திருவிழாவில் 151 பேர் பலியான பரிதாபம்!!Representative Image.

தென் கொரிய தலைநகர் சியோலில் நேற்று இரவு ஹாலோவீனைக் கொண்டாட ஒரு பெரிய கூட்டம் சந்துக்குள் நுழைந்தபோது, நெரிசலில் சிக்கி 151 பேர் உடல் நசுங்கி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் டீனேஜர்கள் மற்றும் 20 வயதுடைய இளைஞர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சியோலின் இடாவோன் மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த சம்பவத்தில் மேலும் 65 பேர் காயமடைந்ததாக யோங்சன் தீயணைப்பு நிலையத்தின் தலைவர் சோய் சுங்-பியோம் சம்பவ இடத்தில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

காயமடைந்தவர்களில் 19 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது மற்றும் அவசர சிகிச்சை பெற்று வருவதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் சமூக இடைவெளியை நாடு நீக்கிய பிறகு மூன்று ஆண்டுகளில் சியோலில் நடந்த முதல் ஹாலோவீன் நிகழ்வு இதுவாகும். இந்த திருவிழாவில் நூற்றுக்கணக்கானோர் கொள்ளப்பட்டது தென்கொரியா மட்டுமல்லாது பல உலக நாடுகளையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பல்வேறு நாட்டு தலைவர்களும் இதற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்