Thu ,Nov 30, 2023

சென்செக்ஸ் 66,760.94
-140.97sensex(-0.21%)
நிஃப்டி20,065.10
-31.50sensex(-0.16%)
USD
81.57
Exclusive

மர்ம காய்ச்சல் 2 சிறுமிகள் உயிரிழப்பு....அதிர்ச்சியில் அதிகாரிகள்..!

madhankumar June 09, 2022 & 11:55 [IST]
மர்ம காய்ச்சல் 2 சிறுமிகள் உயிரிழப்பு....அதிர்ச்சியில் அதிகாரிகள்..!Representative Image.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சுப்ரியா என்ற 8 வயது சிறுமி ஒருவர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இவர் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள காசிநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவரின் மகள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுமி சுப்ரியா பரிதாபமாக உயிரிழந்தார்.

அதே கிராமத்தை சேர்ந்த சொரிமுத்து என்பவற்றின் 6 வயது மகள் பூமிகா என்பவர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் சுகாதாரத்துறை அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் மட்டும் இல்லாமல் காசிநாத புறம் கிராமத்தில் கடந்த சில நாட்களாகவே அடுத்தடுத்து சிறியவர் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. காசிநாதபுரம் பள்ளிக்கூடம் தெருவைச் சேர்ந்த 42 வயதான மாரியம்மாள், சந்துரு, ரோகித், லாவண்யா, சிவராஜேஷ், சிவசக்தி உட்பட 14 பேர் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தனர் எனக் கூறப்படுகிறது. இவர்களில் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யபட்ட நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர்.

வாசுதேவநல்லூர் கிராமத்தில் இருக்கும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் பலநாட்களாக நீர் தேக்கிவைக்கப்பட்டு சுத்தம் செய்யாமல் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவது தான் இதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சஷ்டி வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்