கனடாவில் இந்தியாவைச் சேர்ந்த 21 வயதே ஆன பிரபல டிக் டாக்கர் மரணமடைந்த தகவல் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவை சேர்ந்த மெகா தாகூர் தனது இரண்டு வயதில் பெற்றோருடன் கனடாவிற்கு குடி பெயர்ந்தார். கனடாவில் ஒன்டாரியோ மாகாணத்தில் வசித்து வந்த இவருக்கு தற்போது 21 வயது.
சமூக வலைதளங்களில் குறிப்பாக டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து லட்சக்கணக்கான பாலோயர்களை கொண்டுள்ளார். டிக்டாக்கில் மட்டும் மேகாவிற்கு சுமார் 9 லட்சத்துக்கும் அதிகமான பாலோயர்ஸ் உள்ளார்கள். மேலும் இன்ஸ்டாவில் 10 லட்சத்திற்கும் அதிகமான பாலோயர்ஸ் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த நவம்பர் 24 ஆம் தேதி மேகா உயிரிழந்து விட்டதாக அவரின் பெற்றோர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். மேலும் மேகாவின் இறுதிச் சடங்கு நவம்பர் 29 ஆம் தேதி நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளனர். எனினும் மேகா எதனால் உயிரிழந்தார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
மேகா உயிரிழந்த தகவலறிந்து அவரது ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…