பசுவை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் மகாராஷ்டிராவில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர், 22 வயதான தீபக் ராஜ்வாடே எனத் தெரியவனதுள்ள நிலையில், ஐபிசி பிரிவு 377 இன் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
லோனாவாலா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் படி, குற்றம் சாட்டப்பட்டவர் புனேவில் உள்ள குஸ்கானில் வசிப்பவர் ஆவார்.
புகார்தாரர் சதீஷ் தக்டு கோகரே, மே 31 அன்று, தனது பசு திடீரென சத்தம் போடுவதைக் கேட்டு ஓடி பார்த்தபோது, மாட்டுத் தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த மாட்டின் மீது நிர்வாணமாக வாலிபர் ஒருவர் வலுக்கட்டாயமாக இயற்கைக்கு மாறான உறவில் ஈடுபடுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
சதீஷின் குடும்பத்தினர் மாட்டுக்கொட்டகை அருகே திரண்டதால், தீபக் அங்கிருந்து தப்பியோடினார். ஆனால், அவரது செயல் சதீஷ் குடும்பத்தினர் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதையடுத்து சதீஷ் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீபக்கை கைது செய்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…