Wed ,Sep 27, 2023

சென்செக்ஸ் 66,118.69
173.22sensex(0.26%)
நிஃப்டி19,716.45
51.75sensex(0.26%)
USD
81.57
Exclusive

3 சிறப்பு ரயில்களின் சேவை ஆகஸ்ட் வரை நீட்டிப்பு - முன்பதிவு தொடங்கியது..!

Saraswathi Updated:
3 சிறப்பு ரயில்களின் சேவை ஆகஸ்ட் வரை நீட்டிப்பு - முன்பதிவு தொடங்கியது..! Representative Image.

மதுரை, ராமநாதபுரம் மற்றும் நாகர்கோவிலில் இருந்து தெலங்கானாவுக்கு இயக்கப்பட்டுவரும் 3 சிறப்பு ரயில்களின் சேவை ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 

தெலங்கானா மாநிலம் காச்சிகுடா மற்றும் செகந்திரபாத்திற்கு மதுரை, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன. அதன்படி, மதுரையிலிருந்து காச்சிகுடாவிற்கு வாரந்தோறும் திங்கட்கிழமையும் மறுமார்க்கத்தில் புதன்கிழமையும் சிறப்பு ரயில் கடந்த சில மாதங்களாக இயக்கப்பட்டுவருகிறது. 

இதேபோல், ராமநாதபுரத்திலிருந்து செகந்திரபாத்திற்கு வாரந்தோறும் புதன்கிழமையும் மறுமார்க்கத்தில் வெள்ளிக்கிழமையும் சிறப்பு ரயில் இயக்கப்பட்டுவருகிறது. மேலும், நாகர்கோவிலில் இருந்து காச்சிகுடாவிற்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமையும், மறுமார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன. 

இந்நிலையில், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து தெலங்கானா மாநிலத்திற்கு இயக்கப்பட்டுவரும் 3 வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவையானது வரும் ஆகஸ்ட் மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவும் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்