Mon ,Dec 11, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

2 ஆண்டுகளாக 10 வயது சிறுமியை சீரழித்த கொடூரம்.... இனி சாகர வரைக்கும் ஜெயிலு தான்…

Gowthami Subramani October 01, 2022 & 18:30 [IST]
2 ஆண்டுகளாக 10 வயது சிறுமியை சீரழித்த கொடூரம்.... இனி சாகர வரைக்கும் ஜெயிலு தான்…Representative Image.

கேரளாவில், 10 வயது சிறுமியை 2 ஆண்டுகளாக பாலியம் வன்கொடுமை செய்த 41 வயது நபருக்கு 142 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர், ஆனந்தன் பிஆர் என்பவர். மார்ச் 20, 2021 ஆம் ஆண்டு இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதில், 41 வயதுடைய ஆனந்தன் என்ற நபர் இரண்டு ஆண்டுகளாக 10 வயது சிறுமியை பாலியன் வன்கொடுமை செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர் குழந்தையின் உறவினர் எனவும், இவர் குழந்தையின் பெற்றோருடன் அதே வீட்டில் தங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது.

கேரளாவில் பத்தனம்திட்டாவில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில், 10 வயது குழந்தையை 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 142 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையுடன், 5 லட்சம் அபராதமும் விதித்துள்ளது. பத்தனம்திட்டா மாவட்டத்தில் போக்சோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழங்கப்படும் அதிகபட்ச தண்டைனை இதுவே ஆகும்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்