பள்ளி கல்வித்துறை சார்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி காலியாக உள்ள 152 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில், பள்ளிகல்வித் துறையில் மொத்தம் 152 காலி பணியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ள பட்டம் பெற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மாத சம்பளமாக ரூ.32 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Senior Fellows மற்றும் Fellows பணிகளுக்கு மொத்தம் 152 காலி பணியிடங்கள் உள்ளன, இதற்கு விண்ணப்ப கட்டணம் ஏதும் கிடையாது, மேலும் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருப்பம் உள்ளவர்கள் வருகிற 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்ற காலகெடு அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு tnschools.gov.in என்ற இணையதளத்தை பார்க்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…