Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,563.59
567.28sensex(0.78%)
நிஃப்டி22,313.45
189.80sensex(0.86%)
USD
81.57
Exclusive

உலகக்கோப்பை கால்பந்து தொடர்...கத்தாரை ரவுண்டு கட்டி அடிக்கும் சர்ச்சைகள்...6000 தொழிலாளர்கள் மரணம்!

Priyanka Hochumin November 21, 2022 & 13:10 [IST]
உலகக்கோப்பை கால்பந்து தொடர்...கத்தாரை ரவுண்டு கட்டி அடிக்கும் சர்ச்சைகள்...6000 தொழிலாளர்கள் மரணம்!Representative Image.

உலகக்கோப்பை பணிகளுக்காக பல நாட்டு புலம்பெயர் தொழிலார்களை நடத்திய விதத்திற்காக கத்தார் நாடு பெரும் விமர்சனத்திற்கு ஆளானது.

2022இல் உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் உரிமத்தை கத்தார் நாடு 2010 ஆம் ஆண்டு பெற்றது. அன்று முதல் போட்டி நடத்துவதற்கான வேலைப்பாடுகளை தொடங்கியது. அந்த போட்டியை நடத்துவதற்காக ஒரு புது நகரத்தையே உருவாக்கினார். அந்த பணிகளை செய்ய குறிப்பாக இந்தியா, வங்கதேசம், நேபாளம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகம் ஈடுபட்டனர். ஏறத்தாழ 30,000-க்கும் மேற்பட்டோர் கட்டுமான பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்த கட்டுமானப்பணியில் புலம்பெயர் தொழிலாளர்களை நடத்திய விதத்திற்காக கத்தார் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. ஏனெனில் இந்த 10 ஆண்டு காலத்தில் சுமார் 6000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்ததாக ‘தி கார்டியன்’ அறிக்கை ஒன்றை வெளியிட்டது. கத்தாரில் நிலவும் கடுமையான வெப்பத்தில் தினமும் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் உள்ளிட்ட காரணங்களால் தொழிலாளர்கள் மரணத்துள்ளனர். ஆனால் அவர்கள் இயற்கை மரணம் அடைந்ததாக பதிவு செய்யப்பட்டதாகவும், இந்த எண்ணிக்கை கூட குறைத்து சொல்லிருக்கலாம் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு கூறுகிறது.

இது போன்ற தகவல்கள் வெளியானதால் பலரும் கத்தார் நாட்டில் உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற கூடாது என்று எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் கத்தாரில் போட்டியை நடத்த தேர்வு செய்தது தவறான முடிவு என்று பிஃபாஃ தலைவர் செப் பிளாட்டர் தெரிவித்தார். இந்த போட்டி நடைபெற கட்டுமான பணியில் ஈடுபட்டு இறந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் புகைப்படங்களை கொண்டு உருவாக்கப்பட்ட மொசைக் ஆர்ட் பேனர், லுசைல் மைதான வாயிலில் வைக்கப்பட்டுள்ளது.

என்ன தான் இவ்ளோ கொடுமைகள் நடந்தாலும், கோலாகலமாக கலை நிகழ்ச்சிகளுடன் கத்தாரில் உலகக்கோப்பை கால்பாந்து தொடர் தொடங்கியுள்ளது. அதிலும் முதல் போட்டியானது கத்தார் – ஈகுவடார் அணிகள் மோத உள்ளன. தொடக்க விழா நடைபெற்ற அல் ரயான் நகரில் உள்ள அல் பயத் அரங்கில் தான் இந்தப் போட்டி  நடைபெறுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்