Sat ,Mar 02, 2024

சென்செக்ஸ் 73,806.15
60.80sensex(0.08%)
நிஃப்டி22,378.40
39.65sensex(0.18%)
USD
81.57
Exclusive

அந்த குடைய எடுத்துட்டு போங்க....4 நாட்களுக்கு வெளுத்துவாங்கப்போகும் மழை..!

madhankumar July 03, 2022 & 11:20 [IST]
அந்த குடைய எடுத்துட்டு போங்க....4 நாட்களுக்கு வெளுத்துவாங்கப்போகும் மழை..!Representative Image.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்துவருகிறது. இது மேலும் நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தி குறிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அந்த செய்தி குறிப்பில் மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை மறுநாள் ஜூலை 5,6 ஆகிய தேதிகளில் நீலகிரி,கோயம்புத்தூர்,திருப்பூர், தேனி,திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை  வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமானது வரை  மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு குமரிக்கடல் கச்சத்தீவு, மன்னார் வளைகுடா, இலட்சத்தீவு , கர்நாடகா – கேரளா கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கிமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். இதனால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாமென்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்