Tue ,Dec 12, 2023

சென்செக்ஸ் 69,928.53
102.93sensex(0.15%)
நிஃப்டி20,997.10
27.70sensex(0.13%)
USD
81.57
Exclusive

கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலி.. ஆன்மிக சுற்றலா சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்..

Nandhinipriya Ganeshan October 19, 2022 & 11:28 [IST]
கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலி.. ஆன்மிக சுற்றலா சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்..Representative Image.

உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் உலக பிரசித்தி பெற்ற குகைக்கோயிலுக்கு ஆண்டுதோறும்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கேதார்நாத் கோயிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்ததை அடுத்து, இந்த ஆண்டு யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து தமிழகத்தை சேர்ந்த பிரேம்குமார், சுஜாதா, கலா, ரமேஷ் உட்பட 6 யாத்ரீகர்கள் கடந்த 12 ஆம் தேதி கீர்த்தி யாத்ரா எனும் பெங்களூரை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் மூலமாக ஆன்மீக சுற்றுப்பயணமாக கேதார்நாத் சென்றுள்ளனர். 

இதில் ருத்ர பிரயாக் எனும் இடத்தில், பிரேம்குமார், சுஜாதா மற்றும் அவரது தங்கை கலா என மூவரும் ஹெலிகாப்டர் பயணம் மேற்கொண்டுள்ளனர். மேலும், கலாவின் கணவர் ரமேஷ் என்பவர் மட்டும் குதிரையில் பயணம் மேற்கொள்ள இருந்ததால் அவர் ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது.

'ஆர்யன் அவியேஷன்' நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் சென்று தரிசனம் முடிந்து திரும்பி கொண்டிருந்தனர். அப்போது 'கருட் சட்டி' என்ற இடத்துக்கு மேலே பறந்தபோது, ஹெலிகாப்டர் திடீரென நிலைத்தடுமாறி அங்கிருந்த மலையின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 1 விமானி, 6 யாத்ரீகர்கள் ஆகிய 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்