திடீரென வாகனம் தீப்படித்து எரிவது, சார்ஜ் போடும் போது பேட்டரி வெடிப்பது போன்ற சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இது பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்து வருகிறது. இந்த நிலையில் மும்பையில் உள்ள பல்கார் மாவட்டம் வசை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி வெடித்து 7 வயது சிறுவன் பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராம்தாஸ் நகரை சேர்ந்த சர்பாஸ் அன்சாரி என்பவரின் மகன் சபீர் ஷாநவாஷ் அன்சாரி. 7 வயதான இச்சிறுவன் சம்பவத்தன்று இரவு அவரது பாட்டியுடன் வீட்டில் ஒரு அறையில் தூங்கிக்கொண்டு இருந்தான். இந்தநிலையில், அதிகாலை ஒரு 2.30 மணியளவில் சர்பாஸ் அன்சாரி அவரது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரியை எடுத்து சிறுவன் தூங்கிய அறையில் சார்ஜ் போட்டுள்ளார். சுமார் 5.30 மணிக்கு பயங்கரமான சத்தத்துடன் பேட்டரி வெடித்து சிதறியுள்ளது. பேட்டரி வெடித்ததில் சிறுவன் சபீருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது, அவருடைய பாட்டி லேசான காயங்களுடன் தப்பினார்.
உடனே, 80% தீக்காயங்களுடன் சிறுவனை அருகில் உள்ள மருத்துவமணையில் சிகிசைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், சிறுவன் சபீர் அன்சாரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் ஸ்கூட்டர் பேட்டரி ஓவர்ஹீட் ஆகி வெடிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. அதேநேரத்தில் பேட்டரியை 3-4 மணி நேரம் வரை சார்ஜ் போட வேண்டும் என விற்பனையாளர்கள் கூறியதாக சர்பாஸ் அன்சாரி தெரிவித்தார். மேலும், இது குறித்து விசாரணையில் நடைப்பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
எனவே, பொதுமக்கள் இரவு தூங்கும் போது பேட்டரி மற்றும் செல்போன்களை சார்ஜ் போடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக பல மணி நேரம் சார்ஜ் போடுவதை தவிர்ப்பதும் நல்லது. அதேபோல், எலக்ட்ரிக் வாகன பேட்டரிகள் திறந்த பகுதியில், மனிதர்கள் கண்காணிப்பில் சார்ஜ் போடப்பட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அசம்பாவிதங்களை தவிர்க்கலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…