கும்பகோணத்தில் சர்ச்சைக்குரிய வகையில் அம்பேத்கர் படத்தை சுவரொட்டியாக அச்சடித்த அச்சக உரிமையாளர் கைது இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் நேற்று சட்டமேதை அம்பேத்கரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு குடியரசுத்தலைவர் முதல் அனைத்து கட்சி தலைவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழகத்தின் பல்வேறு காட்சி சார்பிலும் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் காவி உடையும் நெற்றியில் விபூதி குங்குமம் வைத்தவாறு அம்பேத்கர் சுவரொட்டி கும்பகோணம் நகரில் ஒட்டப்பட்டது. இதற்கு விசிக, திக, திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளரான குருமூர்த்தி என்பவர் அம்பேத்கரை அவமதிக்கும் விதமாக சித்தரித்து போஸ்டர் ஒட்டியது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவரைக் கைது செய்த வேண்டுமென நேற்று திமுக, விசிக உள்ளிட்ட கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டது. சுவரொட்டி அச்சடித்த குருமூர்த்தி நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் சுவரொட்டியை வடிவமைத்து அச்சிட்ட அச்சக உரிமையாளர் மணிகண்டன் இன்று கைது செய்யப்பட்டார். அவர் மீது கலவரத்தை தூண்டும் வகையில் சுவரொட்டி அச்சடித்தது, பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தவறு எனத் தெரிந்தே அம்பேத்கர் படத்தை தவறாக அச்சிட்டது உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் கும்பகோணம் நகர கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து இன்று இரவு கும்பகோணம் குற்றவியல் நீதிபதி முன் மணிகண்டன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை எதிர்வரும் 21 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து மணிகண்டன் இன்றிரவு கும்பகோணம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…