Sat ,Dec 02, 2023

சென்செக்ஸ் 67,481.19
492.75sensex(0.74%)
நிஃப்டி20,267.90
134.75sensex(0.67%)
USD
81.57
Exclusive

கூட்டு பாலியல் வன்கொடுமை! கழட்டி விட்ட காதலன்.. காதலனை மாட்டி விட நாடகம் ஆடிய காதலி

Gowthami Subramani Updated:
கூட்டு பாலியல் வன்கொடுமை! கழட்டி விட்ட காதலன்.. காதலனை மாட்டி விட நாடகம் ஆடிய காதலிRepresentative Image.

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில், இளம்பெண் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை செய்ததில் திடீர் திருப்பம் நிகழ்ந்துள்ளது.

கூட்டு பாலியல் வன்கொடுமை! கழட்டி விட்ட காதலன்.. காதலனை மாட்டி விட நாடகம் ஆடிய காதலிRepresentative Image

செங்கல்பட்டில் தனது தோழியைப் பார்த்து விட்டு சைதாப்பேட்டை செல்வதற்கு ரயில் நிலையத்தில் காத்துக் கொண்டிருந்த பெண் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்து, அந்த இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் செங்கல்பட்டில் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது அந்தப் பகுதியில் வந்த கார் ஒன்றில் 4 பேர் கொண்ட கும்பல் அந்தப் பெண்ணைக் கடத்தியதாகவும், மேலும், செங்கல்பட்டை அடுத்த சாலவாக்கத்தில் உள்ள காட்டுப் பகுதிக்குள் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அந்த 21 வயது இளம்பெண் தெரிவித்துள்ளார்.

கூட்டு பாலியல் வன்கொடுமை! கழட்டி விட்ட காதலன்.. காதலனை மாட்டி விட நாடகம் ஆடிய காதலிRepresentative Image

இதனையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த இளம்பெண் கொடுத்த புகார் தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், குற்றவாளிகளை உடனே கைது செய்யுமாறும், தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்டனர்.

கூட்டு பாலியல் வன்கொடுமை! கழட்டி விட்ட காதலன்.. காதலனை மாட்டி விட நாடகம் ஆடிய காதலிRepresentative Image

இந்த சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட இளம்பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீசார் தெரிவித்தனர். மேலும், சிகிச்சைக்குப் பிறகு அந்தப் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்ட போது தன்னைக் காதலித்து கல்யாணம் செய்யாமல், ஏமாற்றிய காதலனை சிக்க வைப்பதற்கே தன்னை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலியாக புகார் அளித்தது தெரியவந்தது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்