ஆதார் கரண்டு வாங்கி 10 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த ஒரு விபரங்களையும் புதுப்பிக்காத ஆதார் வைத்திருப்பவர்கள் அடையாள மற்றும் வசிப்பிடச் சான்று ஆவணங்களை கொண்டு ஆதாரை புதுப்பிக்க வலியுறுத்தப்படுகிறார்கள் என்று யுஐடிஏஐ (UIDAI) தெரிவித்துள்ளது.
ஆதார் எண்களை வழங்கும் அரசு நிறுவனமான யுஐடிஏஐ ஒரு அறிக்கையில், இந்த புதுப்பிப்பை ஆன்லைனிலும் ஆதார் மையங்களிலும் செய்யலாம் என்று கூறியுள்ளது. எனினும் இதை செய்ய வேண்டியது கட்டாயமா என்பதை யுஐடிஏஐ கூறவில்லை.
10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் எண்ணைப் பெற்று, அதன்பின் எந்த ஆண்டும் தகவல்களைப் புதுப்பிக்காதவர்கள் ஆவணப் புதுப்பிப்பைச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேவையான கட்டணத்தைச் செலுத்தியதன் மூலம் அடையாள ஆவணங்கள் மற்றும் வசிப்பிடச் சான்றுகள் புதுப்பிக்கப்படுகின்றன.
மை ஆதார் வலைதளத்திலோ அல்லது அருகிலுள்ள ஆதார் மையத்திலோ செய்து கொள்ளலாம் என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் திட்டம் கருவிழி, கைரேகை மற்றும் புகைப்படங்கள் மூலம் அடையாளத்தை நிறுவுகிறது.
கடந்த 10 ஆண்டுகளில், தனிநபர்களுக்கான அடையாள ஆதாரமாக ஆதார் எண் மாறிவிட்ட நிலையில், பல்வேறு அரசு திட்டங்கள் மற்றும் சேவைகளில் இது முதன்மையாக பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…