Tue ,Jul 23, 2024

சென்செக்ஸ் 80,429.04
-73.04sensex(-0.09%)
நிஃப்டி24,479.05
-30.20sensex(-0.12%)
USD
81.57
Exclusive

தமிழகத்தில் ஆவின்பால் கொள்முதல் அதிகரிப்பு..! அமைச்சர் மனோ.தங்கராஜ் தகவல்..!!

Saraswathi Updated:
தமிழகத்தில் ஆவின்பால் கொள்முதல் அதிகரிப்பு..! அமைச்சர் மனோ.தங்கராஜ் தகவல்..!!Representative Image.

தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படும் பாலின் அளவு 27.80 லட்சம் லிட்டரிலிருந்து 30.80 லட்சம் லிட்டராக அதிகரித்திருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ.தங்கராஜ் தெரிவித்துள்ளார்.  

சென்னை கிண்டியில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI) சார்பில் மாணவர்களுக்கான தமிழ்நாடு உயர்கல்வி கருத்தரங்கு மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோ. தங்கராஜ், ஆவின் நிறுவனத்தில் ஏப்ரல் மாதத்தில் சராசரியாக நாளொன்றுக்கு 27.80 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது, அதுபடிப்படியாக உயர்ந்து தற்போது 30.80 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது.  விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான கொள்முதல் செய்யும் இடத்திலேயே பாலின் கொழுப்பு, புரதத்தை ஆய்வு செய்து விலை நிர்ணயம் செய்து ரசீது வழங்குகிற முறையை தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற தொடர் நடவடிக்கைகளால், ஆவின் நிறுவனத்ம் விரைவில் சிறந்த நிறுவனமாக உருவாகும்.

ஆவினில் கொள்முதல் குறைவாகவும், தேவை அதிகமாகவும் இருந்த இக்கட்டான சூழலிலிருந்து, தற்போது கொள்முதலும்  அதிகரித்து, விநியோகமும் அதிகரித்துள்ளது. தொடர்ந்து விநியோக சங்கிலி பாதிக்கப்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.  ஆவின் பால் பொருட்களில் முதலில் கவனம் செலுத்திய பின்னர், ஆவின் குடிநீர் திட்டத்திற்கான நடவடிக்கை எடுக்கப்படும். 

அம்பத்தூரில் 12 கோடி ரூபாய் செலவில் ஆராய்ச்சி மையம் தொடங்கப்படவுள்ளது. ஆவின் முகவர்களை கலந்தோசிக்காமல் எந்த முடிவும் எடுக்கப்படுவதில்லை. 
பால்வளத்துறையைப் பொறுத்தவரை உடனடி இலக்குகளை நிவர்த்தி செய்ய முன்னுரிமை அளிக்கப்படும். அதனைத் தொடர்ந்து பால் முகவர்கள், விவசாயிகள், 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆவின் ஊழியர்களின் கோரிக்கைகள் உள்ளிட்டவைகள் ஒவ்வொன்றாக பரிசீலித்து நிவர்த்தி செய்யப்படும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்